உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் நகராட்சி அலுவலர்!

வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் நகராட்சி அலுவலர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டு, முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் நவீனா, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி காளீஸ்வரி. காளீஸ்வரியின் தந்தை துரை கண்ணன் தனது மகள் காளீஸ்வரி பெயருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சொத்துக்களை எழுதி தந்துள்ளார். அதன்படி காளீஸ்வரி பெயருக்கு வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்கு காளீஸ்வரியின் கணவர் செல்வ குமார் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உள்ளார்.அங்கிருந்த வருவாய் உதவியாளர் நவீனா என்பவர் பெயர் மாற்றம் செய்வதற்கு உயர் அதிகாரிகள் தெரிவித்தபடி 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர கேட்டுள்ளார். முதல் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுத்து பெயர் மாற்றம் செய்வதில் உடன்பாடு இல்லாத செல்வகுமார், தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்தார் .இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, எஸ்.ஐ. தளவாய் மற்றும் சுந்தரவேல், பாண்டி, கோமதி, முத்து, ஷியாம் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்து மறைந்திருந்து நோட்டமிட்டனர். மேலும் செல்வகுமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயன பவுடர் தடவிய பத்தாயிரம் ரூபாயை பில் கலெக்டர் நவீனா வாங்கிக்கொண்டார். செல்வகுமாரிடமிருந்து லஞ்சப்பணத்தை அவர் பெற்றபோது போலீசார் கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது வருவாய் உதவியாளர் நவீனா கண்ணீர் விட்டு அழுது, 'உயர் அதிகாரிகள் சொன்னதால்தான் வாங்கினேன்' என தெரிவித்துள்ளார்.லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை தலைமையிலான போலீசார் வருவாய் உதவியாளர் நவீனாவை கைது செய்து, லஞ்சத்தில் பங்கு வாங்கும் உயர் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

S.jayaram
ஜூலை 31, 2025 07:23

நீங்கள் உங்கள் கடமையான வாக்குரிமையினை 500,1000 என லஞ்சம் பெற்றுக்கொண்டு செய்யும்போது அதிகாரிகளும் லஞ்சம் பெறத்தான் செய்வார்கள். முதலில் நாம் அரசிடம் இருந்து இலவசமாக எதிர்பார்க்கவேண்டியது கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகியவையே, இலவசஅரிசி, டிவி, பஸ்பாஸ், 1000 ரூபாய் பணம் போன்றவை அல்ல ஆனால் இன்று மத்திய மாநில அரசுகள் நாட்டுமக்களை பிச்சைக்காரர்களைப் போல நடத்துகின்றனர். இன்று இந்தியா முழுமைக்கும் மாநில அரசுகள் பெண்களுக்கு உதவிப்பணம் என்று கொடுக்கும் வழக்கத்தினை கொண்டிருக்கிறார்கள், அதற்குப் பதில் அவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் சோம்பேறியாக்ககூடாது.


Venkatesan Srinivasan
ஜூலை 31, 2025 08:33

இந்த லஞ்ச பணத்தில் இருந்து அரசால் மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள் கண்டிப்பாக வழங்கப்படுவது இல்லை. அரசாங்கம் லஞ்சம் பெறுவது இல்லை. அதன் ஊழியர்கள் தான் பெறுகின்றனர். பெறும் தனியார் நிறுவனங்களில் லஞ்சம் என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. அவற்றில் நடைமுறைகள் கணிணி மயமாக்கப்பட்டு எந்த ஒரு செயலையும் பல நிலைகளில் வெவ்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். பெரும்பாலும் மாநில அரசு செயல்பாடுகள் அடிமட்ட பணியாளர்களால் கணிணி கொண்டு செயல்படுவதில்லை. மக்களை நேரடியாக சந்தித்து மட்டுமே பணிகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு நபர்கள் சந்திப்பு கட்டாயம் உள்ள போது லஞ்ச எதிர்பார்ப்பு உருவாகிறது.


Swaminathan S
ஜூலை 30, 2025 17:49

ராமபுரம் சென்னை கார்பொரேஷன் உள்ள வந்ததும் பஞ்சாயத் சொத்து வரி கம்யூட்டர் உள்ள போட்டாங்க. அதில் பிளாட்ல் உள்ள எல்லோர் பேரையும் மாறிவிட்டார்கள். லஞ்சம் கொடுத்து பெயர் மாற்றம் செய்தார்கள். என்ன சொல்ல.... சர்வே எண் தப்பா டிபே செய்து மாற்ற லஞ்சம் ஓடுது... யார் கேட்க


Arumuga nainar
ஜூலை 30, 2025 16:42

கேலி கூத்து


Selvan
ஜூலை 30, 2025 14:50

தண்டனை மிக கடுமையாக இருக்கவேண்டும்


Joe Rathinam
ஜூலை 30, 2025 14:32

This commission, corruption and collection are prevalent as an unwritten law of the land. No one can stop it in a democratic country like India.


SELVARAJ SELVARAJ
ஜூலை 30, 2025 11:58

மாட்டிக்கொள்பவர்கள் அயோக்கியர்கள் மாட்டாமல் தப்பித்து இருப்பவர்கள் யோக்கியர்கள்


ravikumar l
ஜூலை 30, 2025 10:42

நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடிக்க வேண்டும்.உயர் அதிகாரி சொன்னதால் செய்தேன் என்று சொல்கிறாரே,என்ன வேண்டுமானாலும் செய்வாரா??


Mani . V
ஜூலை 30, 2025 03:44

கோடிகளில் ஊழல் செய்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆயிரங்களில் லஞ்சம் வாங்குபவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அதுனால, இனிமேல் லட்சங்களில் ஊழல் செய்ய, லஞ்சம் வாங்க பழகிக் கொள்ளுங்கள்.


vivek anand
ஜூலை 30, 2025 01:03

madurai thirumangalam nagaratchila manger malliga oru signku 5000 vangiranga epd india marum


Natarajan Ramanathan
ஜூலை 29, 2025 23:38

. வேலையில் இருந்து நிரந்தர நீக்கம் செய்தால்தான் இந்த பிரச்சனை கொஞ்சமாவது குறையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை