உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முரசொலி செல்வம் காலமானார்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முரசொலி செல்வம் காலமானார்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை : திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம், 84, இன்று ( அக்-10) காலமானார். முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும் எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமானவர் முரசொலி செல்வம். இவர் கருணாநிதியின் உடன்பிறந்த சகோதரியான சண்முக சுந்தரம்மாள் மகன். இவர் கருணாநிதியின் மகள் செல்வியை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் லேசாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று மாரடைப்பால் அவர் காலமானார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மறைந்த செல்வம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இவரது இரங்கல் செய்தியில்; கருணாநிதியின் மூத்த பிள்ளை சிறு வயது முதல் முரசொலியின் பணிகளை தோளில் சுமந்து , என் வளர்ச்சியில் துணையாக இருந்த பேரன்புக்குரிய அண்ணனை இழந்து நிற்கிறேன். நான் சாய்வதற்கு கிடைத்த ஒரே தோளை , கொள்கைத்தூணை இழந்து தவிக்கிறேன். தன் எழுத்துக்களால் ஜனநாயகத்தின் குரலாக ஒலித்தவர். தேர்தல் களம் முதல் திரைப்பட துறை வரை சிறந்த முத்திரை பதித்தவர். அதிர்ந்து பேசாதவர், ஆனால் ஆழமான கொள்கைவாதி, இவரது இழப்பால் அதிர்ந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில் நான் யாருக்கு ஆறுதல் சொல்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Matt P
அக் 12, 2024 13:22

இவருக்கும் மந்திரி பதவி வழங்கியிருக்கலாம் வாழும்போது. இருந்தாலும் பிள்ளை குட்டின்னு வந்திட்டால் தன் பிள்ளைகள் மேல் தான் எல்லோருக்கும் பாசம் இருக்கும்.


Lion Drsekar
அக் 11, 2024 19:03

84 வயதிலும் இளமையாக இருந்திருக்கிறியார் பாராட்டுக்கள், அதே போன்று குடும்ப சொத்தைப் பராமரித்தும் வந்திருக்கிறார், வீட்டுக்கு வீடு வாசற்படி, அண்ணன் குடும்பம் இன்று உலகின் முதலிடத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறார்கள் , ஆனால் இவரோ வாழ்வளித்த குடும்பத்துக்கு மட்டுமே வாழ்ந்து தியாகம் செய்த்துள்ளார் . அவரது ஆன்மா சாந்தி அடையாது காரணம் அந்த அளவுக்கு இவர் தான் வாழ்வை இந்த குடும்பத்துக்காக தியாகம் செய்திருக்கிறார் , வாழ்க இவரது புகழ் வந்தே மாதரம்


Matt P
அக் 12, 2024 13:04

படம் அவரு முப்பது வயசில எடுத்ததாக இருக்கும். புது படம் கிடைக்கலை போலிருக்கு நமது நாளிதழுக்கு. குடும்பத்துக்காக தியாகம் செய்தால் சாந்தி கிடைக்காதா?


nv
அக் 11, 2024 07:00

இந்த பாரினில் இது நடப்பது இயல்புதானே!!


ரகுபதி
அக் 11, 2024 03:41

அத்தை மகன் எப்படி அண்ணன் ஆக முடியும்.


Matt P
அக் 12, 2024 13:27

கட்சி ஒரு குடும்பம் மாதிரி . அங்கே எல்லோரும் அண்ணண் தம்பி என்று தான் சொல்லி கொள்வார்கள். இது அண்ணா காலத்திலிருந்தே தொடர்கிறது.அங்கே அக்கா தங்கைகள் கூட கிடையாது. கருணாநிதி தம்பி ஸ்டாலின் என்பார்.


muthu
அக் 11, 2024 00:23

மரணம் கொடுமையானது காரணம் மணிதன் தான் .NO GOD NO GOD NO GOD


sankaranarayanan
அக் 10, 2024 21:19

அரைக் கம்பத்தில் பறக்கும் திமுக கொடி.. முரசொலி செல்வம் மறைவையடுத்து திமுக தலைமை உத்தரவு. இது கட்சி தொண்டர்களுக்கு மிகவும் வேதனையை தருகிறது.ஒரு சாதாரண தொண்டனுக்குக்கூட இல்லாத மரியாதையா இப்போது இவருக்கு என்றுதான் யோசிக்க வேண்டும்.இவர்களின் உறவைத்தவிர கட்சிக்கு என்ன செய்து விட்டார் என்று சொல்லவே முடியாது.


vijay
அக் 10, 2024 17:51

ஆழ்ந்த இரங்கல். ஆனால் முதல்வர் அய்யா சொல்வது மாதிரி இந்த "ஜனநாயக தூண்" என்கிறாரே, அங்கேதான் சந்தேகம். திமுக கட்சியிலே கூட ஜனநாயகம் இல்லை, வாரிசுநாயகம் மட்டும்தான் உள்ளது. எப்பூடி


Matt P
அக் 12, 2024 13:06

அவரு குடும்பம் தானே திமுகவில் ஜனநாயகம். தன்னால் குடும்பத்தின் ஜனநாயகத்தூண் என்ற பொருளில் சொல்லியிருப்பார்.


vijai
அக் 10, 2024 17:30

நாட்டுக்கு இழப்பு இல்லை


Kavitha Shanmugham
அக் 10, 2024 16:32

ஆழ்ந்த இரங்கல்


C M Amrtheswaran
அக் 10, 2024 16:28

அடுத்தது என்ன, அரசு செலவில் நினைவுச் சின்னம்தானே❓


சமீபத்திய செய்தி