உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 குழந்தைகள் கொலை: தாய்க்கு சாகும் வரை ஆயுள்!

2 குழந்தைகள் கொலை: தாய்க்கு சாகும் வரை ஆயுள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: திருமணத்தை மீறிய உறவுக்காக 2 குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கில், தாய் அபிராமி மற்றும் காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகிய 2 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய், 30. இவரது மனைவி அபிராமி,25. இருவருக்கும் அஜய், 6 என்ற மகனும், கார்னிகா,4, என்ற மகளும் இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t6ja49qt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அபிராமிக்கும், அதே பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம்,25, என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு, நீண்ட நாட்களாக பழகி வந்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மகன், மகளை அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.இது தொடர்பாக, அபிராமி, அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்தையும், குன்றத்துார் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா வாதாடி வந்தார்.விசாரணை முடிந்து, இவ்வழக்கில் இன்று (ஜூலை 24) நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில், தாய் அபிராமி மற்றும் கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரம் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.இதையடுத்து, தாய் அபிராமி மற்றும் கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில், நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

mankani
ஜூலை 25, 2025 07:47

ivalakku enna venumo atha jail la kidunga sogam Venum ivalakku nalla vachu sai ya sollunga


பேசும் தமிழன்
ஜூலை 24, 2025 19:10

அடேயப்பா தீர்ப்பு கிடைக்க 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கிறது....7 வருடமாக வழக்கை இழுத்தடித்து இருக்கிறார்கள்..... இதே போன்ற நீதிமன்றம் தான்..... ஆளுநர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு காலக்கெடு விதிக்கும் செயலை செய்து இருக்கிறது.... இவர்கள் வழக்கை விசாரித்து முடிக்க காலக்கெடு எதுவும் இல்லையா ???


Rathna
ஜூலை 24, 2025 19:04

இன்னும் குறைந்தது 40 வருடம் இலவச மாமியார் வீடு சோறு. வாரத்திற்கு ஒரு முறை சிக்கன் பிரியாணி, பண்டிகைகளுக்கு இனிப்பு வகைகள், வருடத்திற்கு இரண்டு முறை பரோல்,அரசாங்க கஜானா காலி.


Natchimuthu Chithiraisamy
ஜூலை 24, 2025 18:55

தண்டனை காலத்தில் உணவுக்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டு அந்த தொகைக்கு வேலை வாங்க வேண்டும். job ஒர்க் வெளியில் இருந்து சிறையில் பெற வேண்டும்.இல்லை செலவுகளால் நாடு நாசமாய் போகும். அதிகாரிகள் சம்பளம் ,அரசியல்வாதிகள் கமிஷன்,அதிகாரிகள் கமிஷன், –னா நாடு தாங்காது. இவனுங்க வாழ்வுக்கு விவசாயிகள் உற்பத்தி செய்யவேண்டும் மக்கள் மாடாய் உழைத்து வரிக்கட்ட வேண்டும். நாட்டின் கடன் 8 லட்சம் கோடி வட்டி 40 ஆயிரம் கோடி என்னசெய்வார்கள் வருங்கால மக்கள்...


Haja Kuthubdeen
ஜூலை 24, 2025 16:40

இரண்டு குழந்தைகளை காம ஆசைக்காக கொன்றுள்ளாள்...இந்த தண்டனை போதுமா...சாகும்வரை இவர்களை சோறு போட்டு பாதுகாக்கனுமா..


JaiRam
ஜூலை 24, 2025 16:21

ஆனால் இது சொரியார் கொள்கைக்கு எதிரானது சு வீ பா இந்த தீர்ப்பை கேட்டு மிகவும் மனம் வருந்தி இருப்பார்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 24, 2025 16:20

அப்பீல் செய்தால் இருவருக்கும் ஜாமீன் கிடைக்கும். அப்புறம் என்ன ? குழந்தை உற்பத்தி தொழிலில் முழு மூச்சாக ஈடுபடலாம்.


Azar Mufeen
ஜூலை 24, 2025 16:17

இதெல்லாம் தண்டனையா, ஆசிட் ஊற்றியிருக்கவேண்டும்


தரணிதரன் காஞ்சிபுரம்
ஜூலை 24, 2025 16:12

தண்டனை சாகும் வரை சோறு தண்ணிர் கொடுக்க கூடாது என்றிருக்க வேண்டும்.


சிவம்
ஜூலை 24, 2025 15:17

சாகும் வரை ஆயுள் தண்டனை என்பது சரியான தீர்ப்பு. மரண தண்டனையை விட சரியான தண்டனை. ஒவ்வொரு நாளும் புழுங்கி புழுங்கி சாக வேண்டும். தலைவர்கள் பிறந்த நாள், நன்னடத்தை போன்ற காரணங்களுக்கு தண்டனை குறைக்க கூடாது.


சமீபத்திய செய்தி