உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்துள்ளது: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிவிப்பு

தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்துள்ளது: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிவிப்பு

சென்னை : 'தமிழகத்தில், ஆதாயக் கொலைகள் மற்றும் கொலைகள், திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த, 2024ல் பதிவான வழக்குகள், அவற்றின் தற்போதைய விசாரணை நிலை, அதன் வகைப்பாடுகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. அப்போது, நகை, பணம் உள்ளிட்ட சொத்துக்களை கொள்ளையடிக்கும் விதமாக நடந்த ஆதாயக் கொலைகள் தொடர்பாக, 2023ல், 83 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்தாண்டில், 75 வழக்குகள் பதிவாகி, 10 சதவீதம் குறைந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=arig60un&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டுக் கொள்ளை தொடர்பாக, 2023ல், 133 வழக்குகள் பதிவான நிலையில், கடந்தாண்டில், 110 ஆக குறைந்துள்ளது. கொள்ளை தொடர்பாக, 2023ம் ஆண்டுடன் ஒப்பீடுகையில், 373 வழக்குகள் குறைந்துள்ளன.திருட்டு தொடர்பாக, 2023ல், 17,788 வழக்குகள் பதிவாகி இருந்தன. அதுவே கடந்தாண்டில், 15,892 வழக்குகளாக பதிவாகி, 10.65 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆதாயக் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை, வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்கள், அமாவாசை இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகள் வாயிலாக, குற்ற வழக்குகளை குறைப்பது சாத்தியமாகி உள்ளது.'சிசிடிவி' காட்சிகள் கண்காணிப்பு, புதிய இடங்களில், 'சிசிடிவி' பொருத்துதல், 'ஸ்மார்ட்' காவலர் செயலி மற்றும் எப்.ஆர்.எஸ்., செயலி வாயிலாக படம் பிடித்து, பழைய குற்றவாளிகளை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளும், குற்ற வழக்குகள் குறைய காரணமாக அமைந்துள்ளன. கொலை, கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல் தொடர்பாக, 2023ல், 49,266 வழக்குகள் பதிவாகின. அதை ஒப்பிடும் போது, கடந்தாண்டு, 17,789 வழக்குகளாக குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.இவற்றில், கொலைகளை பொறுத்தவரையில், 110 வழக்குகள் குறைந்துள்ளன. கலவரங்கள் ஏற்பட்டது தொடர்பாக, 2023ல், 1,305 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்தாண்டில், 76 வழக்குகள் குறைந்துள்ளன. இரண்டு ஆண்டுகளில், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையில், 423 பேருக்கு சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அவர்களில், 235 பேருக்கு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைத்துள்ளது.ஜாமினில் வெளிவந்து குற்றங்களில் ஈடுபட்ட, 86 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவு ரவுடிகளுக்கு ஜாமின் கையெழுத் திட்டவர்கள், 21 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. குற்ற வழக்குகளில் சிக்கிய, 8,266 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

ravi
மார் 25, 2025 21:27

இதுபோன்ற டி ஜி பீ க்கள் நாட்டின் பாதுகாப்புக்கு தேவையில்லை கோமாவில் இருக்கிறார் போலும் நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாத நபர்களின் கையில் தமிழகம் அல்லோலப்படுகிறது


Rajan A
மார் 07, 2025 16:51

இதை யார் எழுதி கொடுத்தது? அமைதி பூங்காவில் இன்னும் குற்றங்கள் நடக்கிறதா?


பாலா
மார் 07, 2025 14:46

கொலைகள், கொள்ளைகள், பாலியில் பலாற்காரம், கஞ்சா, போதை இவருக்கு தெரியவில்லையா அல்லது புரியவில்லையா?


Muralidharan raghavan
மார் 07, 2025 12:11

எதோ கட்சி தலைவர் போல பேசுகிறார்


sugumar s
மார் 07, 2025 12:03

கொலை கொள்ளை குறைஞ்சிருக்குன்னு சொல்ல சொன்னாங்க


பாரத புதல்வன்
மார் 07, 2025 12:01

போலீஸ் துறை இதில் கடைசி இரண்டு எழுத்தை நீக்கி விட்டு படியுங்கள் சரியான பெயர் தெரியும் .அரசுக்கும் துறைக்கும் பொருத்தமான பெயர்.


Sankare Eswar
மார் 07, 2025 11:36

ஆமாமாம் ... 100 ... 99 .... ஆக குறைஞ்சிருக்கும்.... ஆஹா ... உங்களுக்கு சார் ப்ரோமோஷன் தருவார்


Perumal Pillai
மார் 07, 2025 11:30

சிரிப்பு போலீஸ் .


Anand
மார் 07, 2025 11:15

பகலில் தூங்கினால் இப்படித்தான் கெட்ட கெட்ட கனவா வரும்...


Ganapathy Subramanian
மார் 07, 2025 11:07

பாலியல் மற்றும் போஸ்கோ வழக்குகளின் எண்ணிக்கையை பற்றி சொல்லவில்லையே? இந்த வருடம் பொய் கேஸ்கள் போடவேண்டாம் என்று திராவிடஸ் ஆட்சியாளர்கள் சொல்லிருப்பார்களோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை