உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வட இந்தியாவில் நிகழ்வது போல தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு; திருமாவளவன் வேதனை

வட இந்தியாவில் நிகழ்வது போல தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு; திருமாவளவன் வேதனை

சென்னை: நெல்லை மாணவன் கவின் கொலை உள்ளிட்ட ஆணவக் கொலை சம்பவங்களுக்கு, ஜாதி பெருமை அரசியல் தான் காரணம் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக எம்.பி., திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தயக்கம் ஏன்?

அவர் கூறியதாவது;நெல்லையில் நடந்துள்ள ஆணவக்கொலை அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அந்தக் கொலையில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், படுகொலை செய்த சுர்ஜித், அவரது தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். கவினின் தந்தை, சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 3 பேரின் மீதும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் தாயாரை கைது செய்வதில் போலீசாருக்கு என்ன தயக்கம் என தெரியவில்லை.கவுசல்யா - சங்கர் விவகாரத்தில் சங்கர் படுகொலை செய்யப்பட்ட போது, நேரிடையாக அவர்கள் யாரும் தலையிடவில்லை. கூலிப்படையை வைத்து கொலை செய்தனர். ஆனால், சங்கர் படுகொலையில் கவுசல்யாவின் தாய், தந்தை, தாய்மாமன் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்தனர். அதன் அடிப்படையில் தான் கவினின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.,டி., விசாரணைக்கு மாற்றியுள்ள நிலையில், அவர்கள் நேர்மையாக நடந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாதி பெருமை அரசியல்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டுமல்ல வட, மேற்கு மாவட்டங்களிலும் கூட பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜாதியவாத சக்திகளும், மதவாத சக்திகளும் ஜாதி பெருமிதத்தை ஒரு அரசியலாக உயர்த்திப் பிடிக்கிறார்கள். ஜாதி பெருமிதத்தின் அடிப்படையில் இதுபோன்ற கொலைகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர். வட இந்திய மாநிலங்களில் தான் இதுபோன்ற படுகொலைகள் நடக்கும். இது தமிழகத்தில் தற்போது அதிகரித்துள்ளன. இது ஜாதியவாத சக்திகளும், மதவாத சக்திகளும் திட்டமிட்டு பரப்புகிற ஜாதி பெருமை அரசியல் தான் காரணம். இதனை தடுப்பதற்கு தேசிய அளவில் ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஜனநாயக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழக அரசு மீது அதிருப்தி

மத்திய அரசும் இந்தக் கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. தமிழகம் உள்பட மாநில அரசுகளும் கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு, ஆவணக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்றலாமா? என்று கடிதம் எழுதியுள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கருத்து சொல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஆணவக் கொலை தொடர்பாக சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளார்கள். அந்த வழிகாட்டுதல்களை கூட தமிழகம் உள்பட பிற மாநிலங்கள் பின்பற்றவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்றோம். ஆனால், அவரை சந்திக்க முடியாததால், அவரது துறையில் மனு கொடுத்துள்ளோம்.ரஷ்யாவில் படிக்கச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவன், கடலூரைச் சேர்ந்த கிஷோர், பொய் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவரைக் கட்டாயப் படுத்தி, போர் பயிற்சி அளித்து, உக்ரைனுக்கு எதிரான போர் முனையில் நிறுத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அவரை மீட்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மனு அளித்துள்ளோம்.

சட்டம் அவசியம்

எஸ்.சி., பி.சி., எனும் அடிப்படையில் ஆணவக் கொலைகள் நடப்பதில்லை. ஓ.பி.சி., சமூகத்தினரிடையே கூட ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தாலும் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. எனவே, இது ஒரு சமூகப் பிரச்னை. தேசிய அளவிலான பிரச்னை, தேசிய அளவில் சட்டத்தை கொண்டு வருவது தான் கோரிக்கை, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Dv Nanru
ஜூலை 31, 2025 22:40

என்ன திருமாவளவனனுக்கு ஒண்ணுமே தெரியாதா நான்கரை ஆண்டுகாலமாக உங்கள் கூட்டணியில் கொலை கொள்ளை இது தானே நடக்குது இதை அப்ப அப்ப தோழர் சண்முகம் மட்டும் ஏதாவது சொல்லுவாரு அதை தவிர வேறுயாரும் எதுவுமே கேட்பது கிடையாது அதிலும் முத்தரசன் சுத்தம் இன்னும் ஒரு 10 கோடி கிடைக்கும் அதனாலே வாயை சாப்பிடக்கூட திறப்பது இல்லை ...


KRISHNAN R
ஜூலை 31, 2025 21:13

.. கட்சிகள் ஒரே அடிப்படையில்.. உள்ளன.. பிறகு என்ன நடக்கும்


M Ramachandran
ஜூலை 31, 2025 20:02

அங்கே வடக்கெ போயி நோண்டிகிட்டு பார்த்தீங்களா. நீங்க போனது பாகிஸ்தானாக இருக்கும்.


பேசும் தமிழன்
ஜூலை 31, 2025 18:52

அப்போ விடியல் ஆட்சி சரியில்லை என்று கூறுகிறாயா.... நீ என்ன தான் சொல்ல வாற ??.... இதை தான் கூழுக்கும் ஆசை.... மீசைக்கும் ஆசை என்று கூறுவார்கள்.


V Venkatachalam
ஜூலை 31, 2025 18:20

ஆடு நனையூதேன்னு ஓநாய் அழுததாம். அதென்ன வட இந்தியா? இதான் குறுக்கு சால் ஓட்டுறது. வேங்கை வயலில் ஆரம்பிச்சுது.. ஏழைகள் உழைச்சு நாட்களை ஓட்டுகிறார்கள். இவரு அவங்க மேலே உக்காந்து நாட்களை ஓட்டுகிறார்.. இவரெல்லாம் பேசுவது தமிழ் நாட்டின் விதி..


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 31, 2025 17:37

ஆனா அங்க ஓசி பிரியாணிக்கு ஒருத்தனும் அலயரது இல்லை. ஓட்டல்ல காசு குடுக்காம தின்கிறதில்லை


HoneyBee
ஜூலை 31, 2025 16:17

அண்ணனுக்கு ரெண்டு சீட் பார்சல். இதுக்கு தானே ஆசைப் பட்டாய் நாய் பிரியாணி


saravan
ஜூலை 31, 2025 15:49

அண்ணன் கம்பு சுத்துனாரு ஆனா கம்பு சுத்தாத மாதிரியே தெரிஞ்சது அதான் நம்ம தலைவர்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 31, 2025 15:42

ஜாதி அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளை அதன் தலைவர்களை தடை செய்ய வேண்டும். ஜாதி வாரி இட ஒதுக்கீடு தடை செய்து பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும் போது ஜாதி மதம் கேட்டு பதிவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். குழந்தை பிறப்பில் இருந்து இறப்பு வரை எந்த இடத்திலும் ஜாதி மதம் கேட்பது அரசு அலுவலகங்கள் முதல் தனியார் அலுவலகங்கள் வரை தடை செய்யப்பட வேண்டும். மதம் மாறுவது மதம் மாற்றம் செய்வது முற்றிலும் தடை செய்ய வேண்டும். பிறப்பின் போது என்ன மதமோ அதையே தான் இறப்பு வரை பின்பற்ற வேண்டும். தாய் தந்தை சம்மதம் இல்லாமல் திருமணங்கள் நடத்த பதிவு செய்ய முற்றிலும் தடை விதிக்க வேண்டும். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணங்கள் நடைபெற வேண்டும். இரு வீட்டு பெற்றோரும் திருமண பதிவில் சம்மதித்து கட்டாயம் கையெழுத்து இட வேண்டும்.


theruvasagan
ஜூலை 31, 2025 15:40

வட இந்தியாவில் நடக்கிறதை போல இங்கேயும் நடக்கிறதாம். ஆக இங்க நடக்கிற தப்பு தண்டாவுக்கெல்லாம் வடக்குதான் காரணம். இப்படித்தான் பல்லுபடாம பக்குவமாக செய்யணும். ஆனால் வேங்கைவயல் சம்பவம் மாதிரி வடக்கே நடக்கலியே. அதுல நாமதானே முன்னோடி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை