உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தியாகராஜன் கோட்டைக்குள் புகுந்த மூர்த்தி: மாநகராட்சி அரசியலால் அமைச்சர்களுக்குள் கலகல...

தியாகராஜன் கோட்டைக்குள் புகுந்த மூர்த்தி: மாநகராட்சி அரசியலால் அமைச்சர்களுக்குள் கலகல...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியாக, அமைச்சர் தியாகராஜனின் சொந்த தொகுதியில் (மத்திய தொகுதி) 'எழில்கூடல்' என்ற பெயரில் மெகா துாய்மை பணி திட்டத்தை துவக்கி வைத்து 'கெத்து' காட்டினார் அமைச்சர் மூர்த்தி. பதறிப்போன அமைச்சர் தியாகராஜன் நேற்று தனது தொகுதிக்குள் அவசரமாக சென்று மக்கள் சந்திப்பு முகாம் நடத்தி மூர்த்திக்கு 'செக்' வைத்தார்.மதுரை மாவட்டத்தில் 10 சட்டபை தொகுதிகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் மத்தி, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகள் நகர் தி.மு.க., செயலாளர் தளபதி கட்டுப்பாட்டிலும், அமைச்சர் மூர்த்தியின் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் கிழக்கு, சோழவந்தான், மேலுார் தொகுதிகளும், அவரது விசுவாசியான மணிமாறனின் தெற்கு மாவட்ட தி.மு.க.,வில் திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையே நகர்ப் பகுதியில் இருந்த மேற்கு சட்டசபை தொகுதி அமைச்சர் மூர்த்திக்கு உட்பட்ட வடக்கு மாவட்ட எல்லைக்குள் மாற்றப்பட்டது.இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு எதிரொலியாக ஆளுங்கட்சி மண்டல தலைவர்கள் பதவியை இழந்தனர். மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். தற்போது தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்நிலையில் மேயர் இந்திராணியை மாற்றி புதிய மேயரை கொண்டுவர அமைச்சர்கள் மூர்த்தி -தியாகராஜனுக்கு இடையே பனிப்போர் நடக்கிறது. இவ்விஷயத்தில் நகர் செயலாளர் தளபதி, அமைச்சர் தியாகராஜன் பக்கம் சாய்ந்துள்ளார். இரு தரப்பிலும் தலா ஒருவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அமைச்சர் மூர்த்தி, 'வரும் சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளிலும் தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்கிறேன். அதற்காக, என் ஆதரவாளருக்கு மேயர் பதவியை தாருங்கள்' என தலைமையிடம் தெரிவித்துள்ளார். இதற்கு தலைமையும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டது. ஆனாலும் மேயர் மாற்றம் தள்ளிப்போகிறது. மூர்த்தி கட்டுப்பாட்டில் இதற்கிடையே மாநகராட்சியை துாய்மைப்படுத்துவதாக கூறி தியாகராஜனின் சொந்த தொகுதியில் 'எழில்கூடல்' திட்டத்தை அமைச்சர் மூர்த்தி துவக்கி 2500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், கட்சியினருக்கு அசைவ விருந்து வைத்துள்ளார். இரவு முழுவதும் அவரது கண்காணிப்பில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் துாய்மை பணி நடந்தது, மக்களிடம் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் மாநகராட்சியை மூர்த்தி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார் என கட்சியினர் கூறினர். இத்தகவல் அறிந்த தியாகராஜனும் இரண்டாவது நாளில் அவரது மத்திய தொகுதிக்குள் சென்று மக்கள் சந்திப்பு நடத்தி மூர்த்திக்கு பதிலடி கொடுத்தார்.

நிர்வாகிகள் கூறுவது என்ன?

தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: மூர்த்தியின் இலக்கு எப்படியாவது மாநகராட்சி பகுதியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது தான். அதற்காக அவர் மேற்கொள்ளும் கட்சிப்பணிகளை தலைமை வரவேற்கிறது. அதேநேரம் அவரை மாநகராட்சிக்குள் வரவிடக்கூடாது என தியாகராஜன், தளபதி தரப்பு முட்டுக்கட்டை போடுகிறது.ஆனால் நகர் பகுதியில் உள்ள தி.மு.க., வட்டம், பகுதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெரும்பாலும் மூர்த்தி கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டனர். தலைமையும் 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற 'அசைன்மென்ட்'டையும் மூர்த்திக்கு கொடுத்துள்ளது. தியாகராஜனின் மத்திய தொகுதி தவிர்த்து அனைத்து தொகுதிகளும் விரைவில் மூர்த்தி வசம் வரும் வாய்ப்புள்ளது. அதற்கான அறிகுறி தான் தியாகராஜனின் கோட்டையான மத்திய தொகுதியில் துாய்மைப் பணித் திட்டத்தை மூர்த்தி நடத்திக்காட்டியுள்ளது. விரைவில் மேயர் மாற்றமும் இருக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

kamal 00
செப் 04, 2025 04:44

இவனுங்களுக்கு ஓட்டு போட்டா மதுரை மக்கள் இன்னும் கதறி தான் ஆக வேண்டும்


Ramanujam Veraswamy
செப் 03, 2025 17:32

Let the cold war continue for some more time. Madurai public can dream of clean city.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 03, 2025 14:44

மேயர் பதவி ஜனாதிபதி பதவியை போன்றது. ஜனாதிபதி இந்தியாவின் முதல் குடிமகன் என்றால் மேயர் நகரத்தின் முதல் குடிமகன். ஆகவே மேயர் பதவியை நாகரீகமான கல்வியில் சிறந்தவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக தொண்டு செய்பவர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்களை நியமிக்க வேண்டும். கண்ட கண்ட கழிசடைகள் கணவன் பின்னால் ஒளிந்து கொள்ளும் பெண்கள் காரில் தொத்திக்கொண்டு அமைப்புக்கள் பின்னால் அப்பா பின்னால் ஒளிந்து கொண்டு குழந்தை தனமாக மன்றத்தில் பேசும் பெண்கள் கட்சி கரை வேட்டி ஆண்கள் ஆணவம் கொண்டு பேசும் கட்சிக்காரர்களை தயவு செய்து நியமிக்காதீர்கள். அப்படி நியமித்து தான் கட்சி நடத்த வேண்டும் என்றால் மேயர் என்ற பெயருக்கு பதிலாக வேறெங்காவது பெயர் வைத்து கொள்ளவும்


m.arunachalam
செப் 03, 2025 12:08

அனைவரும் அறியவேண்டியது ஒன்றுதான் . இவை அனைத்தும் தாற்காலிகமே . இறைவனின் விளையாட்டும், இயற்கையின் விளையாட்டும் உணரவேண்டும் .


T.sthivinayagam
செப் 03, 2025 11:56

ஊறு இரண்டு பட்டால் நாராயணா நாராயணா


sivakumar Thappali Krishnamoorthy
செப் 03, 2025 11:50

மதுரை மக்கள் ஏவாளுவ்க்கு முட்டாள்தனமாக இருப்பார்கள் என்று இவர்கள் தி மு க நடத்தும் தூய்மை பணி திட்டத்தில் மூலம் தெரிகிறது. களப்பணி என்பது தெருவை சுத்தம் செய்வது போல. அதற்குத்தான் தூமை பணியாளர்கள் இருக்கிறார்கள், வார்டு கவுன்சிலர் இருக்கிறார் , அமைச்சர் இதில் என்ன செய்ய போகிறார். ? மாநகராட்சி வசூல் பணத்தை சுத்தமாதொடச்சி எடுக்கறதுக்கு போட்டி. ஊரை சுத்தம் செய்வதற்கு இல்லை .


Artist
செப் 03, 2025 10:11

மும்பை தாதாக்கள் மாதிரி ஏரியாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது ..என்னங்க உங்க அரசியலும் நீங்களும் …


venkatarengan.
செப் 03, 2025 09:54

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மோடி, பிஜேபி எதிர்ப்பு மட்டுமே, சிறுபான்மையினர், ஊடக துறையினர், திரை துறை மற்றும் தமிழர்களின் ஒரு பகுதியினரை திராவிட கட்சி பக்கம் சேர்த்துள்ளது. இதில் பி டிஆர் போன்ற மக்களும் அடக்கம்.


Sangi Mangi
செப் 03, 2025 10:50

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மோடி, பிஜேபி ஆதரவு மட்டுமே, 3 சதவீத சிறுபான்மையினர், ஆரியர்கள், ஊடக துறையினர், திரை துறை மற்றும் தமிழர்களின் ஒரு பகுதியினரை பிஜேபி கட்சி பக்கம் சேர்த்துள்ளது. இதில் டி.வி. ஆர் போன்ற மக்களும் அடக்கம்


V Venkatachalam
செப் 03, 2025 08:52

தியாகு என்னிக்கி அப்பன் மவன் கொள்ளையை போட்டு உடைத்தாரோ அப்பவே சாராய குடும்பம் இவரை பிளாக் பண்ணிட்டுதே. இவர் பெரும் பணக்காரர் என்பதால் பிளாஸ்டிக் சேர் குடுக்காமல் நல்ல சேர் குடுத்து இருக்காங்க.போல.‌மேலும் சாராய குடும்ப கொள்ளை ரகசியம் அவருக்கு தெரியும் என்பதால் அவரை தாமரை இலை தண்ணீர் போல வச்சிருக்காங்க. என்ன பண்றாங்கன்னு பாக்கலாம்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 03, 2025 12:11

பிடிஆர் அவர்களை ஓரம் கட்டியதற்கு இன்னொரு காரணமும் உண்டு . தங்கச்சியின் தோழர் ,கரை வேட்டி கட்டினவன் எல்லாம் கையில கயறு கட்டக்கூடாதுன்னு சொன்னாரு . அதை பிடிஆர் கேக்காம கை நிறைய கலர்கலரா கயறு கட்டிக்கிட்டு இருக்காரு .


V Venkatachalam
செப் 03, 2025 17:14

சுந்தரம் விஸ்வநாதன் சூப்பர் பாயின்ட் சொல்லி இருக்காரு. கன்கிராஜுலேஷன்ஸ். கீப் இட் அப்.


முக்கிய வீடியோ