முருக பக்தர்கள் மாநாடு : பாஸ் விசயத்தில் ஐகோர்ட்
1.30 லட்சம் பேர் முன்பதிவு@@மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்காக 8 லட்சம் சதுரடி பரப்பளவில் உள்ள மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநாட்டின் சிறப்பம்சமாக 5 லட்சம் பக்தர்கள் நேரடியாக பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு வளாகத்தில் 5 லட்சம் சதுரடியில் பக்தர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். மாநாட்டுக்கு வரும் பக்தர்களை ஒருங்கிணைக்க 'கியூஆர்' குறியீடு வெளியிடப்பட்டது. இதன் வாயிலாக, 1.30 லட்சம் பேர் நேற்று மதியம் வரை முன்பதிவு செய்துள்ளனர்.பாஸ் விஷயத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.