ஹிந்துக்கள் உரிமை மீட்கவே முருக பக்தர்கள் மாநாடு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் முருக பக்தர்கள் மாநாடு, மதுரையில் வரும் ஜூன் 22ல் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. மாநாட்டுக்கு, 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மதுரையில் சங்கமிப்பர். வரலாற்று மற்றும் தெய்வீகத் தன்மையுள்ள பழமையான திருப்பரங்குன்றம் மலையில், சிலர் அசைவ உணவை சாப்பிட்டுள்ளனர். இது, அங்கிருக்கும் கடவுளையும், புனித்தன்மை மிக்க மலையையும் களங்கப்படுத்தியது போன்றதொரு நிகழ்வு. இம்மாதிரியான தீய சக்திகளுக்கு எதிராக, உரிமை மீட்கும் மாநாடாகத்தான் முருக பக்தர்கள் மாநாடு நடக்கவிருக்கிறது. ஹிந்து உணர்வுள்ளவர்களெல்லாம் ஒன்றிணைந்து தான் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை ஏற்படுத்தி உள்ளனர். இந்தக் கூட்டணி, நிச்சயம் மத உணர்வுகளுக்கும் ஆன்மிக விஷயங்களுக்கும் எதிராக செயல்படும் தி.மு.க.,வை வீழ்த்தும். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்.- கருப்பு முருகானந்தம், பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,