உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருக பக்தர்கள் மாநாடு ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும்

முருக பக்தர்கள் மாநாடு ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும்

மதுரை: ''ஹிந்துக்களை ஒருங்கிணைக்கவே மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் அரசியல் பேசப்படாது,'' என, மதுரையில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மதுரையில் ஜூன் 22 ல் மதியம் 3:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.முதல்வர் ஸ்டாலினை அழைக்க அனுமதி கேட்டோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனி சாமி, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், பா.ம.க., தலைவர் அன்புமணி, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹிந்து அமைப்புகள் நிகழ்ச்சியை நடத்துவதால், அரசியல் கலப்பு என யாரும் நினைக்கக்கூடாது. அரசியல் சாராது அனைவரும் மாநாட்டுக்கு வர வேண்டும்.இம்மாநாடு அன்று மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும்.மதசார்பற்ற நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்து மதத்தையும் சமமாக நடத்த வேண்டும் என்ற செய்தி மாநாட்டில் வலியுறுத்தப்படும். மாநாட்டில் யாரும் அரசியல் பேச மாட்டர். முழுக்க பக்தி மாநாடாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.- காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில தலைவர், ஹிந்து முன்னணி

பல்வேறு நெருக்கடிகள்!

மாநாட்டில் 10 நாட்களுக்கு முன்பே அறுபடை வீடுகளின் கண்காட்சி அமைக்க திட்டமிட்டோம். அதற்கு அரசும் காவல்துறையும் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தன. நீதிமன்ற அனுமதிக்கு பின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளது. அறுபடை வீடுகள் கண்காட்சி துவக்க விழா இன்று நடக்கிறது. அறுபடை வீடுகளில் இருந்தும் வேல் கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை