உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார் அரசியல்வாதியாக இருப்பார் இசையமைப்பாளர் தீனா ஊகம்

சார் அரசியல்வாதியாக இருப்பார் இசையமைப்பாளர் தீனா ஊகம்

சென்னை : ''அந்த சார் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும்,'' என, இசை அமைப்பாளர் தீனா சொல்கிறார்.'திருடா திருடி' உள்ளிட்ட பல படங்களுக்கு, இசை அமைத்தவர் தீனா. தமிழக பா.ஜ.,வில், வெளிநாடு மற்றும் அண்டை மாநில, தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாநிலத் தலைவராக உள்ளார்.சென்னை மதுரவாயலில், கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவர் அளித்த பேட்டி:தி.மு.க.,வின் மூதாதையரான அண்ணாதுரை பெயரில் செயல்படும் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் வெட்கக்கேடானது. சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவி விலகி இருக்க வேண்டும்.அவர் எதுவும் கருத்து தெரிவிக்காதது, அதை விட வெட்கக் கேடானது. அரசு நடத்தும் ஒரு பல்கலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகும், இந்த ஆட்சி தேவையா?பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ள, 'சார்' யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த சார் ஒரு அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும். எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது தான் புதிராக உள்ளது.தி.மு.க., அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும், நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. பொங்கலுக்கு, 1,000 ரூபாய் இல்லை என, அரசு அறிவித்துள்ளது.இதனால், ஏழை மக்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவர் என்பது, அவர்களுக்கு தெரியவில்லை. வரும் 2026ல், இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Prasanna Krishnan R
ஜன 06, 2025 14:18

Very simple. That girl student which major in Anna University. So that sir must be the department head supporting the ruling party. So both CMs get out ?


Sridhar
ஜன 06, 2025 13:29

அரசியலுக்கு வந்த ஆளா இருக்குமோ? ச்ச சே இருக்காது, ... ஆளாத்தான் இருக்கும்.


ponssasi
ஜன 06, 2025 12:06

கருத்து போடவே பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது, ஞானசேகரன் மேல குண்டாஸ் பாய்ந்தது அவனுக்கு இருக்கும் செல்வாக்கு பின்புலத்துக்கு நாளையே உச்ச நீதிமண்டத்தில் முகில் ரோகித் அல்லது கபில்சிபல் போன்ற வழக்கறிகரை வைத்து வெளிவர வாய்ப்புள்ளது, வந்த மறுநாளே அவன் அமைச்சராகிவிட்டால் என்னாவது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடக்கவுள்ளது கவனிக்கத்தக்கது


R.Balasubramanian
ஜன 06, 2025 11:42

அந்த சார் திமுக முக்கிய சார் ஒருவேளை


sankaranarayanan
ஜன 06, 2025 11:30

அந்த சார் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும், என, இசை அமைப்பாளர் தீனா சொல்கிறார். அய்யா உமக்கு ஏனிந்த வம்பு அந்த சார் ஒரு அமைச்சரோ அல்லது அதற்கு மேல்பட்டவரோ இருந்தாலும் இல்லாவிட்டாலும் உமக்கு என்னய்யா வந்தது பிறகு உமது இசையை அவர்கள் கசக்கி பிழிந்து விடுவார்கள் ஜாக்கிரதை.


sadha
ஜன 06, 2025 11:00

டெலிகாம் நிறுவனத்திடம் அழைப்பு விவரங்களை எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் ஓரிரு நிமிடங்களில் பெற்றுவிட முடியும் ...கண்டிப்பாக ஓங்கோல் வாசிதான் அந்த சார் என்பது திண்ணம்...அதனால்தான் முதல்வர் வாயில் பலமான பூட்டு தொங்குகிறது


sadha
ஜன 06, 2025 10:56

....SIR


Perumal Pillai
ஜன 06, 2025 10:22

நல்ல கருத்துக்கள். முதுகெலும்பு மிக்க ஒரு திரையுலக பிரமுகர்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 09:49

யாரோ சாருக்கு போனில் பேசற மாதிரி ஒரு குற்றவாளி நடித்திருக்கிறான் ...


சமீபத்திய செய்தி