உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எனது மொபைல் போனை 20 ஆண்டுகளாக ஒட்டு கேட்கின்றனர்: சீமான் அதிர்ச்சி

எனது மொபைல் போனை 20 ஆண்டுகளாக ஒட்டு கேட்கின்றனர்: சீமான் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இந்த நாட்டில் தனி மனித சுதந்திரம் இல்லை. எது ஒன்றையும் பதிவு செய்வார்கள்'' என நயினார் நாகேந்திரன் போன் ஒட்டு கேட்ப விவகாரம் தொடர்பான நிருபர்கள் கேள்விக்கு சீமான் பதில் அளித்தார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: கூட்டாட்சி, கூட்டணி ஆட்சி எல்லாம் எங்களுக்கு வேண்டியது இல்லை. எங்களுக்கு தேவை நல்லாட்சி. நாட்டுக்கும், மக்களுக்கும் விரும்பிய ஆட்சி. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zg910ss5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க., கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடத்துகின்றனர். தேர்தல் வரும்போது இது போன்ற நாடகங்களை பார்த்து தான் ஆக வேண்டும். இந்த நாட்டில் அனைத்தும் நீதிமன்றம் மூலம் தான் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிருபர்: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மொபைல் போன் ஒட்டு கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளாரே?சீமான் பதில்: இன்றைக்கு தான் நயினார் நாகேந்திரன் பார்க்கிறார் போல, எனது மொபைல் போனை 20 வருடமாக கேட்கிறார்கள். இந்திய அளவில் ஒட்டு கேட்கப்படும் 50 தலைவர்களில் நான் ஒருவனாக இருந்தேன். தமிழகத்தில் என்னுடையது எல்லாம் ரொம்ப நாளாக ஒட்டு கேட்கப்படுகிறது. இந்த நாட்டில் தனி மனித சுதந்திரம் இல்லை. எது ஒன்றையும் பதிவு செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

theruvasagan
ஏப் 21, 2025 10:53

ஒட்டு கேக்கறவன் காது டர்ர்ர்.. கழுத்து நரம்பு புடைக்கும்படி போடும் கத்தலுக்கு ஒட்டு கேக்கிற மிஷினே செவிடாயிப் போயிடுமே. அப்புறம் அவர் என்னத்தை ஒட்டுகேக்கிறது.


ராமகிருஷ்ணன்
ஏப் 21, 2025 06:10

பெரிய கும்பலே ஆயிடுச்சு, இரக்கமே இல்லாயா உனக்கு.


Shivam
ஏப் 20, 2025 21:23

என்ன சைமன் அப்படி என்ன 20 வருசமா விசியலட்சுமி கிட்ட பேசினீங்க


thehindu
ஏப் 20, 2025 20:38

நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. ஒரு சில கும்பலை எதிர்த்து பேசினால் , கார்போரேட்டு கும்பல்கள் கொள்ளையடிக்க , விஞ்சான கொள்ளையர்கள் நோட்டம் விட என பலவிதமாக...


என்றும் இந்தியன்
ஏப் 20, 2025 18:20

அவ்வளவு அப்பா டக்கரா நீ??? ஐயோ பாவம் எப்படியெல்லாம் நீ உன்னை பற்றி நீயே டப்பாஅடிக்க வேண்டியிருக்கு???


vijai hindu
ஏப் 20, 2025 18:17

சாமி உலக மகா நடிப்புடா திமுக தோற்கடிக்கணும்னா எதிர் கூட்டணி ல சேராம தனியா நின்னு திமுகவுக்கு மறைமுக ஆதரவு


theruvasagan
ஏப் 20, 2025 17:08

சிம்கார்டு போடாமலேயே மணிகணக்குல பேசற ஆளாச்சே நீங்க. அப்புறம அதுல என்ன ஒட்டு கேக்கறது. ஓட்டு கேக்கறது.


venugopal s
ஏப் 20, 2025 16:34

கேட்டவன் இன்னும் உயிரோடு இருக்கிறானா? தூக்கு போட்டு தொங்கி இருப்பானே?


TRE
ஏப் 20, 2025 15:39

சீமான் மொபைல் போனை ஒட்டு கேட்டவர்கள் அதிர்ச்சி மிகவும் ஆபாச உரையாடலை கேட்டு கடும் அதிர்ச்சி


அரவழகன்
ஏப் 20, 2025 15:29

கதை கேட்டிருப்பாங்க...


சமீபத்திய செய்தி