உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் மகன் பெயர் ஜீசஸ்; கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு இளவரசர் பேச்சு

என் மகன் பெயர் ஜீசஸ்; கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு இளவரசர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''என் மகன் பெயர் ஜீசஸ். இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைக்காவிட்டால், நான் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது,'' என்று செங்கல்பட்டில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், ஆற்காடு இளவரசரின் மகன் நவாப் ஜாதா முகமது ஆசிப் அலி பேசினார்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந்தது.இதில் நடிகர் விஜய் முன்னிலையில், ஆற்காடு இளவரசரின் மகனும், திவானுமான நவாப் ஜாதா முகமது ஆசிப் பேசியதாவது: வணக்கம். நான் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகிறேன். ஆனால் எனது மகன் பெயர் ஜீசஸ். மூத்த மகன் பெயர் ஆப்ரகாம்.நாங்களும் மேன்மை தாங்கிய இயேசு கிறிஸ்து, அன்னை மேரி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம். அப்படி இல்லையெனில் நாங்கள் முஸ்லிமே அல்ல. நான் இயேசு கிறிஸ்துவை நம்பவில்லை எனில் நான் முஸ்லிமே கிடையாது. நான் இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; அது தான் என்னை உண்மையான முஸ்லிம் ஆக்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

சந்திரன்
டிச 23, 2025 06:07

வெள்ளைக்கார அடிமை சொம்புகளுக்கு இளவரசர் பட்டம்?


ஜீவன்
டிச 23, 2025 05:54

பிறந்த போது வைத்த பெயரா அல்லது அவர்களுடைய மகன் மதம் மாறி விட்டாரா எனத் தெளிவு படுத்தினால் நல்லது.


Sun
டிச 22, 2025 21:22

மிகத் தெளிவாக ஒரு காயை யாருக்காகவோ இவர் நகர்த்துகிறார்! சிறுபான்மையினர் நாம் அனைவரும் ஒன்றுதான்! இதில் இஸ்லாம் , கிறிஸ்தவம் வேறில்லை என்பதை ஒரு செய்தியாக சொல்ல வருகிறார்!


N Annamalai
டிச 22, 2025 20:30

வேறு நாடுகளில் இது போல் பேச முடியுமா ?.


kgb
டிச 22, 2025 19:36

ஏன் தாடி வைக்கவில்லை


kulanthai kannan
டிச 22, 2025 19:20

நல்ல வேளை, இந்து கடவுள்கள் தப்பித்தார்கள்


Rajah
டிச 22, 2025 19:15

ஏசு கிறிஸ்துவையும் அன்னை மேரியையும் வணங்குபவர்கள் கத்தோலிக்கர்கள். கிறிஸ்தவ மதத்தில் நாளுக்கு நாள் ஒரு புதிய மதம் உருவாக்கிக் கொண்டேயிருக்கும். நோய் வந்தால் வைத்தியம் தேவையில்லை என்று கூறும் பிரிவினரும் உள்ளனர். கத்தோலிக்கர்கள் தவிர்த்து ஏனையப்பிரிவினர் அன்னை மேரியை வணங்க மாட்டார்கள். இஸ்லாத்தில் கூட ஷியா முஸ்லிம்களை முஸ்லிம்கள் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்துக்கள் அன்னை வேளாங்கன்னியையும் வழிபடுவார்கள். நாகூர் சென்றும் வழிபடுவார்கள். அதுதான் இந்துக்களின் சிறப்பு. ஆகவேதான் திராவிட சிந்தனையில் இந்துக்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்று சொல்லப்படுகின்றது.


பா மாதவன்
டிச 22, 2025 19:04

பக்கத்தில் ஜோசப் விஜய் இருந்திருப்பார். அதனால் தான் வாடை அப்படி வருகிறது. எல்லா அரசியல்வியாதிகளையும் நாம் தெரிந்து கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு.


R.MURALIKRISHNAN
டிச 22, 2025 19:03

எதாவது பேசனும். முக்கியமா குழப்பனும். பேர்ல என்ன இருக்கு. மனுசனா இருக்கனும்


பெரிய குத்தூசி
டிச 22, 2025 18:45

இது போன்ற குழப்பவாதிகளால் நாட்டுக்கு ஆபத்து. குட்டையை குழப்பி மீன்பிடிப்பதே இவர்களின் நோக்கம்.


புதிய வீடியோ