உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / " எனது பேச்சில் உள்நோக்கம் இல்லை" : ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு

" எனது பேச்சில் உள்நோக்கம் இல்லை" : ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு

சென்னை: ‛‛ எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை '' என போலீசிடம் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கூறியுள்ளதாக தெரிகிறது.சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 'பரம்பொருள் அறக்கட்டளை' என்ற அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், சமீபத்தில் ஆற்றிய சொற்பொழிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. மகாவிஷ்ணுவின் பேச்சு தங்களை அவமதிப்பதாக இருப்பதாக, மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர், சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.போலீஸ் விசாரணையில் மகா விஷ்ணு கூறியதாக வெளியாகி உள்ள தகவல்: கடந்த காலங்களில் நான் இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி உள்ளேன். விழிப்புணர்வு ஏற்படுத்தவே பேசினேன். நல்வழிப்படுத்துவதே எனது நோக்கம். எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. என்னை சித்தர்கள் வழிநடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

மேலும் ஒரு வழக்கு

மாற்றுத் திறனாளிகள் நீதி இயக்க தலைவர் சரவணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மகா விஷ்ணு மீது திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

'மகா விஷ்ணுவை கைது செய்ய 200 போலீசார் தேவையா'

ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் வாயிலாக, நேற்று காலை சென்னை வந்த மகாவிஷ்ணுவை பிடிக்க விமான நிலையத்தில் 200க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விமான நிலைய வாயிலுக்கு வந்த அவரை, போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்று, பின் கைது செய்தனர். மகாவிஷ்ணு நண்பர்கள் கூறியதாவது: அசோக் நகர் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணுவின் பேச்சு சர்ச்சையான போது அவர், ஆஸ்திரேலியாவில் இருந்தார். இருந்தபோதும், சென்னை திரும்பி வந்து, போலீசாருக்கு உரிய விளக்கம் அளிப்பதோடு, விசாரணைக்கும் ஒத்துழைப்பேன் என்று கூறி வீடியோ வெளியிட்டார். சொன்னபடியே சென்னை திரும்பினார். ஆனால், அவரை தீவிரவாதியை கைது செய்வது போல, 200 போலீசாரை வைத்து கைது செய்திருப்பது நல்ல போக்கு அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

MADHAVAN
செப் 09, 2024 10:54

ஒரு வேலை சொத்துக்கு ....., இப்போ ஆடி கார் ல போறான், கேட்ட ஆன்மிகம், சித்தர் னு கதை விடுறேன்


திண்டுக்கல் சரவணன்
செப் 08, 2024 21:14

தொடர்ந்து இதே லட்சணத்தில் ஆட்சி செய்யவும். ஒரு பிள்ளை பூச்சியை பிடிக்க இருநூறு போலீஸ்....


Dharmavaan
செப் 08, 2024 20:04

பேய் அரசாண்டால் இப்படித்தான் இருக்கும் பேட்டை ரவுடி கல்வி அமைச்சர் என்றால் பள்ளி மாணவர்களை எப்படி உருவாக்குவார் இவர்


நிக்கோல்தாம்சன்
செப் 08, 2024 15:41

அப்படி தான் ஏற்கனவே ஒரு கார்பொரேட் குடும்பத்தை செய்து வைத்துள்ளீர்களே


சோழநாடன்
செப் 08, 2024 15:14

பேசியதற்கு உள்நோக்கம் இல்லையாம்..... விடுதலை பண்ணுங்கப்பா..... சுவீட்டு கொடுத்து கொண்டாடுவோம். அரசியல் கட்சி தொடங்க சொல்லி வலியுறுத்தி, ஆட்சியில் அமர்த்தி முதல்வர் ஆக்குவோம்.


sankari n
செப் 08, 2024 19:34

அடச்சீ..டெல்டாவை காய வைத்திருப்பவர்களுக்கு ஓட்டு போட்டு....விட்டு..பெருமையாக சோழநாடான் என்று பெயர் வேறு


gopi
செப் 08, 2024 14:20

இவரை ஆதரித்து பல செய்திகள்...புரிந்து விட்டது


பிரேம்ஜி
செப் 08, 2024 14:15

சித்தர்கள் வழி நடத்தி சிக்கலில் மாட்டிவிட்டனரா? தேவையில்லாமல் சித்தர்கள் பெயரைக் கெடுக்க வேண்டாம்!


கனோஜ் ஆங்ரே
செப் 08, 2024 13:53

இவன் பாவம், புண்ணியம், போன ஜென்மம், இந்த ஜென்மம் இவற்றையெல்லாம் பேசியது தவறில்லை... ஆனால், அது பேச வேண்டிய இடம் எது...? தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு, நம்பிக்கையையும், மனஉறுதியையும், ஆற்றலையும் அதிகரிக்க என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி இருக்க வேண்டும்... அந்த மாணவச் செல்வங்களிடம் போய், போன ஜென்மத்தில் நீ செய்த புண்ணியம்தான் பணக்காரனாகவும், செல்வந்தனாகவும் இந்த ஜென்மத்தில் பிறந்திருக்கிறாய் என்றால்... அப்ப, அந்த மாணவர்கள் படிக்கும் இடம் அரசு மேல்நிலைப் பள்ளி... அப்ப, அந்த மாணவர்கள் எல்லாரும் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களா...? போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் பத்மா சேஷாத்ரி, பால்யோக், ரெசிடென்சியல் பள்ளி போன்ற மேல்தட்டு மக்கள் பயிலும் பள்ளியில் படிப்பார்களா...? என்னய்யா பேசுற பள்ளி மாணவர்களிடம் போய்...? “பிஞ்சு நெஞ்சினில் நஞ்சை கலப்பதைப் போல”...? ஆமா... உன்ன ஒண்ணு கேக்கணும்... இப்ப மேடை மேடையா போய் பிரசங்கம் பண்ற நீ... நீ என்ன வானத்திலந்து கீழே குதிச்சவனா... இல்ல, யோகியா, சித்தனா, குருவா, சாமியாரா... யார்ரா நீ..? இந்தளவுக்கு இந்துமதம் தரம் தாழ்ந்து போனதற்கு காரணமே உன்ன மாதிரி கேப்மாரிங்களெல்லாம் மேடையேறி பிரசங்கம் பண்றதுதான்...? இதையும் சில ஜென்மங்கள் ஆதரிக்குது பாரு... அந்த ஜென்மங்களுக்கு தெரிஞ்சதுகூட இவனுக்கு தெரியாது..ன்னு அந்த ஜென்மங்களுக்கு தெரியுமா....? என்னடா நடக்குது இங்க...?


Venugopal Ar
செப் 09, 2024 12:57

நண்பா அதெல்லாம் ஒரு பூவும் இல்ல நல்லது தான் சொன்னார் அப்பா கஞ்சா வித்தா தப்பு இல்ல.. பாவம் புண்ணியம் தப்பா விருந்தாளிக்கு விருந்தாளிக்கு பொறந்தவேனே


sridhar
செப் 08, 2024 13:42

நோக்கமே இல்லை , அப்புறம் தானே உள்நோக்கம் .


Svs Yaadum oore
செப் 08, 2024 12:58

மக்களே , இதே போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் சமூக நீதி மத சார்பின்மை சமத்துவம் மாற்று திறனாளி என்று ஏமாற்றி ,தமிழ் மொழி தமிழ் மண் தமிழ் கலாச்சாரம் என்று அனைத்தும் விடியல் திராவிடனுங்க மொத்தமாக அழித்து விடுவார்கள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை