மியாட் மருத்துவமனை நிபுணர்கள் சிறப்பு மருத்துவ முகாம்
புதுச்சேரி: சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற ஆலோசனை முகாம், விழுப்புரம் ராஜ ராஜேஸ்வரி நகர், ஆர்.ஆர்.எம். காஸ்ட்ரோ சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் நடந்தது.முகாமில், சென்னை மியாட் மருத்துவமனையின் கல்லீரல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு, கல்லீரல் நோய் வருவதற்கான காரணங்கள், கல்லீரல் நோய்க்கான அறிகுறிகள், அதனை தடுக்கும் வழி முறைகள் குறித்து விளக்கினர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதேபோல், கடலுார் மஞ்சக்குப்பம் பிவெல் மருத்துவமனையில் நடந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.