உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகை கஸ்தூரியின் மொபைல் போனை ஹேக் செய்த மர்ம நபர்கள்

நடிகை கஸ்தூரியின் மொபைல் போனை ஹேக் செய்த மர்ம நபர்கள்

சென்னை: தனது மொபைல்போனை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்துவிட்டதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த கஸ்தூரி, சில மாதங்களுக்கு முன் வரை அவ்வப்போது பரபரப்பாக பேசி வந்தார். கடந்த ஆண்டு நவ., மாதம் தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பிறகு அவர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். அவ்வபோது அவர் சமூக வலைதளங்களில் கருத்துகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.இந்நிலையில், கஸ்தூரி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: எனது மொபைல் போன் ' ஹேக்' செய்யப்பட்டு விட்டது. இதனை வேறு மொபைல்போனில்இருந்து பதிவிடுகிறேன். எனக்கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை கிண்டல் செய்யும் வகையில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !