உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினம்: நாகை - இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பில்லை எனக்கூறப்பட்டது. கனமழை காரணமாக அக்.,20 ல் இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த போக்குவரத்து 10ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது 17 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை துவங்க விருந்த இந்த கப்பல் போக்குவரத்து 19ம் தேதிக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ