உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓபிஎஸ் விலகியதால் பலவீனமா; நயினார் நாகேந்திரன் பதில்

ஓபிஎஸ் விலகியதால் பலவீனமா; நயினார் நாகேந்திரன் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: '' பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது பலவீனமா என்பது குறித்து தேர்தலில் தான் தெரியும்,'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்மதுரை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஓபிஎஸ் உடன் ஏற்கனவே போனில் பேசியிருந்தேன். ஆனால், என்ன முடிவெடுத்தார்கள் என தெரியவில்லை. வெளியே போவதாக அறிவிப்பு வந்துள்ளது. சட்டசபையிலும் பேசினோம். ஏற்கனவே போனிலும் பேசிக் கொண்டு இருக்கிறோம். சொந்த பிரச்னையா அல்லது வேறு பிரச்னையா என தெரியவில்லை. என்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை ஓபிஎஸ் சந்திக்க அனுமதி வாங்கி கொடுத்து இருப்போம் என முன்னரே கூறியிருந்தேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=du55wldr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஓபிஎஸ்ஐ பிரதமர் புறக்கணிக்க இபிஎஸ் அழுத்தம் ஏதும் கொடுக்கவில்லை. அவர் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு அவரிடம் பேசியிருந்தேன். எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கேட்டு கொண்டேன். தினகரனிடமும் பேசினோம். ஓபிஎஸ் முடிவு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் முடிவுக்கு நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. அவர் விலகியதால் பலவீனமா என்பது குறித்து தேர்தல் தான் தெரியும். முதல்வரை எதற்காக ஓபிஎஸ் சந்தித்தார் எனத் தெரியாது. முதல்வரை சொந்தப் பிரச்னைக்காக கூட சந்தித்து இருக்கலாம். முதல்வரை எனது பிரச்னைக்காக நான் கூட சந்திக்கலாம். கட்சி என்பது வேறு சந்திப்பு என்பது வேறு. அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். சேர்ந்துள்ளாரா இல்லையா என அறிவித்தால் தான் கருத்து சொல்ல முடியும். ஒரு வேளை சொந்த பிரச்னைக்காக சந்தித்தோம் என சொன்னால் என்ன செய்ய முடியும். வரும் காலத்தில் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டால் பிரதமரை சந்திப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
ஆக 02, 2025 06:49

எப்புடியும் நாலு சீட் கிடைச்சிரும். மத்த இடங்களில் டெபாசிட் இழப்பை பன்னீர் உறுதி செய்வார்.


T.sthivinayagam
ஆக 01, 2025 18:21

அண்ணாமலைக்கு பெப்பே அவரை நம்பியவருக்கும் பெப்பே என்ன சாதூர்யம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 01, 2025 17:48

இடுப்பில் ஓணானை கட்டிக் கொண்டு குடையுதே குடையுதே என்று அண்ணாமலை அன்றே சொன்னார் யாரும் கேட்கவில்லை. இப்போது ஓணான் தானக கீழே குதித்து ஓடி விட்டது. இனி குடைச்சல் இருக்காது.


vivek
ஆக 01, 2025 17:45

அது எல்லாம் சரி ஓவியரே , கடைசியா திமுகவில் சில்லறை மற்றும் உதிரி கட்சிகள் எவளோ இருக்காங்க...கொஞ்சம் சொல்ல முடியுமா


Karthik Madeshwaran
ஆக 01, 2025 17:44

இரட்டைஇலை சின்னம் தொடர்பாக இன்று வரை தீர்ப்பு வரவில்லை. ஒபிஸ்ஸை காட்டி பழனிசாமியை மிரட்டி வந்தார்கள். இப்போது யாரை வைத்து மிரட்ட முடியும். ? பழனிசாமிக்கு கொண்டாட்டம், பாஜக கட்சிக்கு திண்டாட்டம்.


KRISHNAVEL
ஆக 01, 2025 17:38

நீங்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது , எதிர் அணியின் சூழ்ச்சிகளை முறியடிக்க ராஜ தந்திரங்கள் நன்றாக தெரிந்துஇருக்க வேண்டும் , சும்மா புலம்புவதால் எந்த பலனும் இல்லை ,


Oviya Vijay
ஆக 01, 2025 16:31

தோல்வித் திருமகள் கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவை ஆட்கொண்டு வருகிறாள்... சங்கிகளின் வயிறுகள் எரிகிறது... எங்களின் கண்கள் குளிர்கிறது... ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்... அதே கூட்டணியில் ஓபிஸ் தொடர்ந்திருந்தாலும் மொத்தக் கூட்டணியும் தோற்கப் போவது என்னமோ உறுதி... உலகில் மொத்தக் கடலும் வற்றிப் போனாலும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு 2026 தேர்தலில் தோல்வி என்பதை மட்டும் மாற்றி விட முடியாது...


Svs Yaadum oore
ஆக 01, 2025 17:12

விடியல் மந்திரி சொன்னது போல தீவிர ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி தி மு க ...ஜெபத்தை இன்னும் தீவிரமாக இப்போதே ஆரம்பித்தால் வெற்றி மேலும் உறுதிப்படும் ..


vivek
ஆக 01, 2025 17:40

அய்யோ ஓவியரே....அந்த வசனம்... இதயம பத்திரம்......அதை போட மறந்துட்டீங்க...


Mohanakrishnan
ஆக 01, 2025 17:48

சொங்கிகள் இன்னும் 8 மாதம் காத்திருக்கவும் மக்கள் புத்திசாலிகள் திருட்டு மாடல் பாடை ரெடி


சமீபத்திய செய்தி