உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்

மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்

கோவை: திண்டுக்கல் ரயில்வே யார்டில், புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால், 4ம் தேதி, கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. 4ம் தேதி காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் (எண்: 116321), விருதுநகர் கரூர் இடையே மாற்றுப்பாதையில், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், ஈரோடு, பாளையம் நிலையங்களுக்குச் செல்லாது. பதிலாக, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில், (எண் 16322) இதே வழித்தடத்தில், மேற்கூறிய நிலையங்களில் நின்று செல்லும், என, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ