உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும்; நயினார் நாகேந்திரன்

பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும்; நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி; இந்த திமுக அரசு போராடுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் நசுக்கிற அரசாக உள்ளது. தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் கொஞ்சமாகவாக நடக்கிறது, ஆளும்கட்சி தரப்பில் எல்லாம் மிரட்டல்கள் நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார். செங்கோட்டையன் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கிறாரா என்பது பற்றி எனக்கு எந்த தகவல் வரவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் ஒரு முடிவை எடுத்துள்ளார். அவரை (செங்கோட்டையனை) நீக்கி உத்தரவிட்டுள்ளார். எங்களை பொறுத்த வரை, அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் உடனடியாக சென்று சந்திக்க முடியாது. 11ம் தேதி கண்டிப்பாக நான் டில்லி செல்கிறேன். செங்கோட்டையன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து ஏற்கனவே வெள்ளை அறிக்கை கேட்டு இருந்தோம். ஆனால் அவர் பதிவு மட்டுமே போட்டுக் கொண்டு இருக்கிறார்.பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். தேவைப்பட்டால் நானே அவர்களிடம் நேரிடையாக சென்று பேசுவேன் என்று சொல்லி இருக்கிறேன். அவர்கள் அழைத்தால் நானே போய் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன் என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். தேவைப்பட்டால் நானே போய் அழைப்புக் கொடுப்பேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Durai Kuppusami
செப் 10, 2025 10:06

இவர் ஒரு விஷயம் தெரியாத ஆளாக இருக்காரு போனவன எல்லாம் கூப்பிட்டு என்ன பண்ண போறே தேவையில்லாமல் குழப்பம் உண்டாக்கி.. என்ன ஐடியா அப்புறம் வேற ஏதாச்சும் வந்துவிட போவுது....நீ எல்லாம் ஒரு தலைவனா


venugopal s
செப் 09, 2025 23:23

நயினார் நாகேந்திரன் கூட்டணியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தலே முடிந்து விடும் போல் உள்ளதே!


Prabu
செப் 09, 2025 22:02

பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும்


murugan
செப் 09, 2025 19:36

நீங்கதானே ஐயா எல்லோரையும் வெளியில் அனுப்பிவிட்டு இப்போது அதிமுகவிற்கு பிஜேபி "பி" டீமாக ஆக்கிவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.


Rajan A
செப் 09, 2025 19:12

காரணமே நீங்க தான்னு போட்டு உடைச்சிட்டாங்க. பாஜக அதிமுக பி டீமாக மாற்றியது யார்னு இப்ப புரிந்துவிட்டது


Tamilan
செப் 09, 2025 18:25

அடக்குமுறை கைகொடுக்கவில்லையெனில் அப்படியே பிச்சையெடுத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான்


ஈசன்
செப் 09, 2025 18:14

எங்கே, எடப்பாடி அவர்கள் எதிரில் இதை சொல்லுங்கள் பார்ப்போம். பிரதமரிடம் சந்திக்க நேரம் அனுமதி கேட்டால் பேசாமல் அமித்ஷாவிடம் சொல்ல வேண்டியது தானே நாகா. அதை விட்டு விட்டு எடப்பாடிக்கு பயந்து நீங்களே இந்த பிரச்சினையை கையில் எடுத்ததில் வந்த விளைவு, இவர்கள் விலகல்.


pakalavan
செப் 09, 2025 17:49

கூட்டணி பிரிஞ்சுபோக மலைதான் காரணம்


R.Balasubramanian
செப் 09, 2025 16:46

அண்ணாமலையை மேட்ச் செய்யும் தலைவர் எந்த திராவிஷ கட்சியிலும் இல்லை


Ravi Prasad
செப் 09, 2025 15:31

Breeze is problem! We want Wind blowing Leader..Annamalai


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை