உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினை சந்திக்கப்போகிறேன்; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கப்போகிறேன்; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; தமிழர்களுக்கு உயர்வு என்று வரும் போது தள்ளி நிற்பது என்பது எந்தவகையில் பொருத்தமாக இருக்கும்? முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கக் கோரிக்கை வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, 'அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழகத்தில் இருந்து பலமான தேசியக்குரல் அதிகாரமிக்கதாக இருக்க வேண்டுமென நினைத்து தற்போது துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தரும், மஹாராஷ்டிர கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம். ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும். இதற்கு இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும். ஆகவே, கட்சி வித்தியாசங்களைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.,க்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தல் வெறும் அரசியல் அல்ல

பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; இந்தியா சுதந்தரம் பெற்ற பிறகு சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக நியமனம் செய்ததன் மூலம் முதல்முறையாக தமிழகம் கவுரவிக்கப்பட்டது. அதன்பிறகு, வெங்கடராமன் துணை ஜனாதிபதியாக்கப்பட்டார். இருவரும் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தனர். தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஏபிஜே அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கியது. தற்போது, தமிழகத்திற்கு மேலும் ஒரு கவுரவமாக, சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நேரத்தில், தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தல் வெறும் அரசியல் விஷயம் மட்டுமல்ல. இது நமது மாபெரும் தேசத்தின் தலைமைத்துவத்திற்கு தமிழகம் செய்து வரும் நீடித்த பங்களிப்புக்கு மரியாதை செலுத்துவதும் ஆகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Jegaveeran
ஆக 18, 2025 20:22

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆவதால் தமிழ்நாட்டுக்கோ, தமிழனுக்கோ எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை....


vivek
ஆக 18, 2025 20:29

இப்போ இருக்கிற தத்திகளால் என்ன நன்மை கிடைத்தது .....சொல்வாயா


venugopal s
ஆக 18, 2025 20:10

உங்கள் கட்சி ஒரு தமிழருக்கு பிரதமர் பதவி கொடுத்தால் நிச்சயம் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் ஆதரிப்பார்கள்.


நரேந்திர பாரதி
ஆக 18, 2025 17:26

அப்பா, ஆயிண்ட்மென்ட் வேணும்னா கொடுப்பாரு


G Mahalingam
ஆக 18, 2025 16:45

போட்டியாக இந்தி கூட்டணியிதல் இருந்து தமிழரை போட்டியிட வைப்பார்கள்.


Paul Durai Singh. S
ஆக 18, 2025 16:24

4 கோடி பணம் சம்பந்தமாக இருக்கலாம்


G Mahalingam
ஆக 18, 2025 16:24

போட்டிக்கு காங்கிரஸ் தமிழக தலைவர்கள் யாரைவது நிறுத்துவார்கள் காங்கிரஸில் இருந்து கொண்டு திமுக செய்தி தொடர்பாளராக இருப்பவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர் சிறுபான்மையினர்.


Madras Madra
ஆக 18, 2025 16:13

பல தமிழர்களை மத்தியில் தலைமை பொறுப்புக்கு வர விடாமல் தடுத்த பெருமை திமுக வுக்கு உண்டு மூப்பனார் , கலாம் வரிசையில் CPR ம் சேரவே வாய்ப்பு அதிகம்


Oviya Vijay
ஆக 18, 2025 15:37

நோ யூஸ்...


vivek
ஆக 18, 2025 20:32

நோ மூளை நோ கவலை ஒன்லி இருநூறு....


திகழ்ஓவியன்
ஆக 18, 2025 13:26

இவருக்கு ஸ்டாலின் APPOINTMENT கொடுக்க கூடாது


guna
ஆக 18, 2025 13:34

appointment குடுத்தே ஆகணும்


Kjp
ஆக 18, 2025 18:08

திராவிடனுக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார் பச்சை தமிழனுக்கு எப்படி அப்பாயின்மென்ட் கொடுப்பார்.


திகழ்ஓவியன்
ஆக 18, 2025 13:24

என்ன நம்ம தலைக்கு வந்த சோதனை, காலையில் ராஜ்நாத் சிங் , ரிஜ்ஜ்ஜ்ஜ்க்கு பேச்சு இப்போ இந்த 4 கோடி புகழ் நைனார் வேறு , என்ன பதில் SORRY


Kjp
ஆக 18, 2025 18:10

தலைக்கு அது சோதனை அல்ல. பெரியசாமி பொன்முடி செந்தில் பாலாஜி இதுதான் அவருக்கு சோதனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை