மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
1 hour(s) ago
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
2 hour(s) ago | 1
கோவை அருகே ரூ.25.5 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை
8 hour(s) ago | 2
மதுரை : 'சார்... மதுரை கருப்பாயூரணி சீமான் நகரில் ரோட்டோரம் புதருக்குள் கருப்பு நிற 'டேப்' ஒட்டப்பட்ட பந்து கிடக்கிறது. பார்க்க நாட்டு வெடிகுண்டு போல் உள்ளது,' என, அண்ணாநகர் போலீசாரிடம் நேற்று காலை 7:45 மணிக்கு ஒருவர் போனில் தகவல் தெரிவித்தார்.'ஷாக்' ஆன போலீசார், வெடிகுண்டு தடுப்புப்படையுடன் வந்து சேர்ந்தனர். கருப்பு நிற பந்து கேட்பாரற்று கிடந்தது. 'திக்...திக்...' மனநிலையுடன் வெடிகுண்டுதானா என கண்டறியும் கருவியை அருகில் கொண்டு போயினர். 'பீப்...' சவுண்ட் கேட்கும் என நாலா பக்கமும் சுழற்றி சுழற்றி பார்த்தனர். சத்தத்தை காணோம்.பெருமூச்சு விட்ட போலீசார், பந்தை எடுத்தனர். கான்கிரீட் பந்து எனத்தெரிந்தது. உடைத்து பார்த்தால் சின்ன சின்ன கம்பிகள் முறுக்கிக்கொண்டு இருந்தன. 'ப்பூ... இது கேபிள் 'டிவி' வயர்களை கீழே இருந்து மேலே துாக்கிப்போடுவதற்காக 'யூஸ்' பண்ணும் பந்து...' என ஒருவர் கூறியதும் 'நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை...' என போலீசார் முகத்தில் அவ்வளவு நிம்மதி தெரிந்தது.
1 hour(s) ago
2 hour(s) ago | 1
8 hour(s) ago | 2