12 மாநிலங்களில் 52 கல்வி வளாகம் துவக்க நாராயணா நிறுவனம் முடிவு
சென்னை : நாராயணா கல்வி நிறுவனங்கள், தமிழகம் உட்பட, 12 மாநிலங்களில், 52 புதிய கல்வி வளாகங்களை துவக்க உள்ளது.இது குறித்து நாராயணா கல்வி நிறுவனங்களின் தலைவர் புனித்கோதபா கூறியதாவது:நாராயணா கல்வி நிறுவனங்களின் கவனம், தமிழகத்தின் மீது உள்ளது. நடப்பாண்டு கோவையில் இரண்டு பள்ளிகள்; ஈரோடு மற்றும் திருச்செங்கோட்டில் தலா ஒரு பள்ளி துவக்கப்பட உள்ளது.இதன் வாயிலாக, தமிழகத்தில் மட்டும் கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கை, 44 ஆக உயர்கிறது.இதுதவிர சத்தீஸ்கரில் நான்கு, மத்திய பிரதேசத்தில் மூன்று, குஜராத், ஹரியானா, மஹாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா இரண்டு, அசாம் மற்றும் பஞ்சாபில் தலா ஒன்று என, விரிவடைகிறது. தெலுங்கானாவில் 21, ஆந்திராவில் எட்டு கல்வி வளாகங்கள் துவக்கப்பட உள்ளன.நாடு முழுதும், ஒவ்வொரு மாவட்டத்திலும், நாராயணா கல்வி வளாகம் அமைப்பதே எங்கள் நோக்கம். குழந்தைகள் மனம் மற்றும் உடல் நலனில், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆற்றும் முக்கிய பங்கை உணர்ந்து, தரமான கல்வியை சிறப்பாக வழங்குவதில் உறுதியாக உள்ளோம். உங்கள் கனவுகளை சாத்தியப்படுத்த, நாங்கள் இருக்கிறோம். ஏனெனில், உங்கள் கனவுகள் தான் எங்கள் கனவுகள்.இவ்வாறு அவர் கூறினார்.