வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அட
சென்னை:சென்னையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில், தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியது சர்ச்சையாகி உள்ளது. சென்னை தி.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தேசியக்கொடியேற்றினார். கொடிக்கு வணக்கம் செலுத்த, கொடியை பார்த்தவர்கள், தலைகீழாக பறப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, தேசியக் கொடி, கீழே இறக்கப்பட்டு, சரியாக பறக்க விடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தலைமை அலுவலகத்திலேயே, தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பேசுபொருளாக மாறி உள்ளது. சமூக வலைதளங்களில் பலரும், தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அட