உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணியை இறுதி செய்ய சென்னை வருகிறார் நட்டா

கூட்டணியை இறுதி செய்ய சென்னை வருகிறார் நட்டா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வரும், 11ம் தேதி சென்னை வருகிறார். லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., அணியில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்களுடன் அவர் பேசி, கூட்டணியை இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, பா.ஜ.,வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறியது. பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்ற முடிவை அறிவிக்காமல் உள்ளன. அந்த இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க பா.ஜ., மேலிட தலைவர்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.

முயற்சி

அந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க.,வும் முயற்சிக்கிறது. தற்போது, பன்னீர்செல்வம் தரப்பு, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, தினகரனின் அ.ம.மு.க., ஆகியவை பா.ஜ., கூட்டணியில் போட்டியிடுவது உறுதி. இதுதவிர, கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய சமூக தலைவர்களும்,பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.வரும், 25ம் தேதிபிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்கு முன்னதாக, பா.ஜ., உடன் போட்டியிடும் கூட்டணி கட்சிகளை இறுதி செய்ய கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. வரும், 11ம் தேதி ஜே.பி.நட்டா சென்னை வருகிறார்.அவர், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலை ஆடிட்டோரியத்தில் நடக்கும், பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என, 4,000 பேர் பங்கேற்கின்றனர். இதன்பின் பா.ஜ., அணிக்கு வர உள்ள கட்சி தலைவர்களுடன், நட்டா பேசுவார். இவ்வாறு பா.ஜ.,வட்டாரங்கள் தெரிவித்தன.

அவசர அழைப்பு

இதற்கிடையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சியின்முக்கியத் தலைவர்கள் டில்லிக்கு வருமாறுஅவசரமாக அழைக்கப்பட்டனர்.அ.தி.மு.க., மற்றும்பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்,நிர்வாகிகள், இன்றுகட்சித் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைகின்றனர்.அந்த நிகழ்ச்சியில்பங்கேற்கவே, தமிழக பா.ஜ., முன்னணி தலைவர்கள் டில்லிக்கு அழைக்கப்பட்டதாக கட்சிவட்டாரங்கள் கூறின.

பாத யாத்திரைக்குஅனுமதி மறுப்பு

பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகையை முன்னிட்டு, எழும்பூர் தொகுதியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பாத யாத்திரையை துவக்கி, அண்ணா நகர் தொகுதியில் முடிக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, ஆர்ம்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் சாலை, நியு ஆவடி ரோட்டில் பாத யாத்திரையாக சென்று பச்சைப்பன் கல்லுாரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி போலீசார், பாத யாத்திரைக்கு அனுமதி தர மறுக்கின்றனர். பொதுக்கூட்டத்தை நடத்தி கொள்ளுமாறு கூறுகின்றனர். எனவே, பாத யாத்திரையுடன் சேர்த்து பொதுக்கூட்டத்திற்கு அனுமதி பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை