உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது: உயர்நீதிமன்றம்

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது: உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; அவற்றுக்கு நாம் தான் காரணம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: உலக நாடுகளில், 'பிளாஸ்டிக்'குகளை குப்பை தொட்டியில் போடுகின்றனர். ஆனால், நாம் தான் அவற்றை, ஆங்காங்கே வீசுகிறோம். தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் சென்று பார்த்தால், இரு பக்கமும் பிளாஸ்டிக் குவிந்து கிடக்கிறது. அங்கிருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கலாம். சாலைகளின் இரு பக்கமும் சேரும் பிளாஸ்டிக் பொருட்கள், மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, நீர் நிலைகளில் போய் சேருகின்றன.இதுபோல, சாலைகள் இரு பக்கமும் சேரும் பிளாஸ்டிக் பொருட்களை, அப்பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மட்டும் அகற்றுவது சாத்தியமில்லை. பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் பற்றி, விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான, 'வாக்கத்தான்' போன்ற நிகழ்ச்சிகளை, இப்பகுதிகளில் நடத்துவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகள் முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம்.இனி வரும் காலங்களில் பேரிடர்களுக்கு இயற்கையை மட்டும் குறை கூற முடியாது. அவற்றுக்கு நாமே காரணம். தங்கள் உரிமைகளை பற்றி மட்டும் பேசும் மக்கள், தங்களின் கடமைகளை பற்றி கவலைப்படுவதில்லை. பிளாஸ்டிக் பாட்டில்களை உடன் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, அவ்வப்போது விளம்பரங்களை வெளியிட வேண்டும். மலைவாசஸ்தலங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள், அருகிலுள்ள ஊர்களில் இருந்து தான் எடுத்து வரப்படுகின்றன. எனவே, அவற்றை தடுப்பது குறித்த அறிக்கையை, அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Sriram Ramarathnam
டிச 05, 2024 07:25

நீதி மன்றங்களில் ப்லாஸ்டிக்கினால் ஆன பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளனவா?


aaruthirumalai
டிச 04, 2024 13:55

எப்பவாவது தெளிவு கிடைக்கும் போல


sugumar s
டிச 04, 2024 13:36

சரியான கேள்வி


Kanns
டிச 04, 2024 13:29

Order & Enforce Ban Plastics to 90% with Alternatives


Chennaivaasi
டிச 04, 2024 13:04

சென்னை மாநகராட்சியில் வீடுகளில் குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தராவிட்டால் ருபாய் ஆயிரம் தண்டம். ஆனால் இப்படி தரம் பிரித்து தரப்படும் குப்பை மொத்தமாக ஒரு லாரியில் தான் எடுத்து செல்லப்படுகிறது. ஒரு இடத்தில ஒன்றாக சேமித்து வைக்க படுகிறது. மாநகராட்சிக்கு யார் தண்டம் விதிப்பது?


Ramesh Sargam
டிச 04, 2024 12:50

மக்கள் அரசின் மீது குறை சொல்கிறார்கள். அரசு இயற்கையின்மீது குறை சொல்லி தப்பிக்க பார்க்கிறது. இனி அப்படி இயற்கையின்மீது குறை சொல்லி தப்பிக்கமுடியாது. மக்களும் திருந்தவேண்டும். முறையாக குப்பைகளை டிஸ்போஸ் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.


S.L.Narasimman
டிச 04, 2024 12:15

இந்த பிளாஸ்டிக் ஒழிப்பை உற்பத்தி கூடத்திலேயே மாநில அளவில் இல்லாது தேசிய அளவில் தடுத்தாக வேண்டும். அதிக பொறுப்பு மத்தியில்தான் உள்ளது.


Barakat Ali
டிச 04, 2024 11:54

சுற்றி வளைத்து அரசு நிர்வாகத்தைக் குறை சொல்வதால் கோல்மால்புர அடிமைகளுக்கு வலிக்கும் .....


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 11:35

சுற்றுச் சூழல் ஒரு science. இது பற்றி தெரியாமல் எதையாவது சொல்வது சரியல்ல. எத்தனை advanced technology, comouter எல்லாம் இருந்தாலும், புயல், மழையை யாராலும் கணிக்கவே இயலாது. ஏற்கனவே வீடு கட்டி முடித்தவர்கள், ஐயோ குவாரி தோண்டறாங்க, ஐயோ செங்கல் சூளைக்கு களிமண் தோண்டறாங்க, பிளாஸ்டிக் ஒயர், சின்டெக்ஸ் டேங்க் வைக்கறாங்க, ஐயோ போர் போட்டு நிலத்தடி நீர் போச்சு, கார் புகை, என்று பேசுவார்கள். அதாவது, இதெல்லாம் பண்ணி அவிங்க வீடு கட்டிப்பாங்க, கார் வெச்சிருப்பாங்க. மத்தவங்க எவனும் நல்லா இருந்துடக் கூடாது ங்கற எண்ணம்.


Barakat Ali
டிச 04, 2024 15:12

1 Jan 2022 — சென்னை: சென்னையில் பெய்த பலத்த மழையை இந்திய வானிலை மையம் முன் கூட்டியே கண்டிக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ... அந்த செய்தி வந்தபொழுது நீங்களெல்லாம் எப்படிக்கருத்து போட்டீர்கள் ???? நினைவிருக்கிறதா ????


Barakat Ali
டிச 04, 2024 16:05

திருத்தம் ..... கண்டிக்கவில்லை அல்ல .... கணிக்கவில்லை என்பது சரி .....


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 04, 2024 11:18

ஒரு பேரிடருக்கு பல தவறுகள் இருக்கையில் ப்ளாஸ்டிக் என்ற ஒரு தவறை மட்டும் சொல்லிவிட்டதினால், அரசாங்கம் இனி திராவிட மாடலில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடிவாளம் போட்டு விட்டு மற்ற தவறுகளை கணம் நீதிமன்றமே கூறவில்லை என்று சொல்லி நியாயப்படுத்தி விடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை