உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரி மூன்றாம் நாள்

மதுரை மீனாட்சி அம்மன் இன்று (அக்.,05) பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிக்கிறாள்.மலையத்துவஜ பாண்டியன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் பார்வதி மூன்று வயது குழந்தையாக தோன்றினாள். தடாதகை எனப் பெயரிட்டு வளர்த்தார் மன்னர். வில், வாள் பயிற்சி, குதிரையேற்றம் போன்ற 64 கலைகளையும் கற்று முடித்தாள். வெற்றி மங்கையான தடாதகை பருவ வயதை அடைந்தாள். மன்னர் மகளுக்கு பட்டம் சூட்டி இளவரசியாக்கினார். இதனால் பாண்டிய நாடு 'கன்னிநாடு' என பெயர் பெற்றது. கண் இமைக்காமல் குஞ்சுகளை பார்வையால் பாதுகாக்கும் மீன் போல, தடாதகையும் மக்கள் நலனில் அக்கறை கொண்டாள். இதனால், 'மீன் போன்ற கண் கொண்டவள்' என்னும் பொருளில் 'கயல் கண்ணி', 'மீனாட்சி' என பெயர் பெற்றாள். மதுரையும் 'துாங்கா நகரம்' என்றானது. ராஜ அலங்கார ஆடை, ஆபரணத்துடன் பாண்டியருக்குரிய வேப்பம்பூ மாலை சூடி பட்டாபிஷேக கோலத்தில் பவனி வரும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தால் மன நிறைவான வாழ்வு அமையும். பாட வேண்டிய பாடல்குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம் நின்குறிப்பறிந்துமறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டிவெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை