உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.சென்னை, தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் அறையில், இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இ.பி.எஸ்., அறையில் அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் எஸ்.பி., வேலுமணி, கடம்பூர் ராஜூ, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.''மரியாதை நிமித்தமாகவே எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தேன்'' என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நடப்பு கூட்டத்தொடரில் முக்கியமான சில விஷயங்களை கேள்வி எழுப்ப ஆலோசனை நடந்ததாக தெரிகிறது. அ.தி.மு.க - பா.ஜ., கூட்டணி அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இ.பி.எஸ்.,யை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சு நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தாமரை மலர்கிறது
ஏப் 22, 2025 19:33

இதே போல் நயினார் நாகேந்திரனை கமலாயத்திற்கு வந்து பார்க்க இபிஎஸ் ஈகோ பார்க்க கூடாது. எடப்பாடி முதல்வர் ஆகவேண்டுமெனில், பரஸ்பர நம்பிக்கையை இப்போதே பழனிசாமி வளர்க்க வேண்டும்.


P. SRINIVASAN
ஏப் 22, 2025 14:28

இது ஒரு வேஸ்ட் கூட்டணி... இவர்கள் பேசி மக்கள் ஏமாற தயாராகவில்லை. மதவாத கூட்டணி.


Barakat Ali
ஏப் 22, 2025 15:02

நீங்கள் சொல்வது உண்மையா அல்லது கற்பனையா என்று மக்கள்தான் முடிவு செய்யவேண்டும் .....


RAVINDRAN.G
ஏப் 22, 2025 15:05

பிஜேபியோட கூட்டணி வைச்சங்களே அப்போ மதவாதம் தெரியலையா சார்


Subramanian N
ஏப் 22, 2025 15:20

உன் பெயரை வீனா போனவன் என்று வைத்து கொள்


பேசும் தமிழன்
ஏப் 22, 2025 19:01

எது மதவாத கூட்டணி என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.... இந்திய யுனியன் முஸ்லீம் லீக்.... தமிழக முஸ்லீம் லீக்.... மனித நேய மக்கள் கட்சி ......பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா..... போன்ற பல பெயர்களில் வந்தாலும்..... அவை அனைத்தும் மத வாத கட்சிகள் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.... அதனால் காதில் பூ சுற்ற வேண்டாம்.


Bala
ஏப் 22, 2025 13:29

திமுக தலைங்களுக்கு ... ஹா ஹா ஹா


sankaranarayanan
ஏப் 22, 2025 13:01

இந்த சந்திப்பு திராவிட மாடல் அரசுக்கு பக்கு பக்கு என்று அடித்துக் கொள்ளும் கூட்டணி காரர்கள் சந்திப்பது சகஜம் என்றே அவர்கள் கருதமாட்டார்கள் அய்யய்யோ என்னவோ அவர்கள் பேசுகிறாளோ என்று வயிற்றில் படக் படக் என்று அடித்துக்கொள்ளும். இரண்டு நாட்களுக்கு ஜுரம் வந்து விடும் தனியார் மருத்துவமனைக்கே செல்வார்கள்


மோகனசுந்தரம் லண்டன்
ஏப் 22, 2025 12:49

ஐயா கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்கய்யா.


M R Radha
ஏப் 22, 2025 14:58

இத தான் நீ கத்துக் கொண்டதா? நீயும் இருநூறு ரூவா கிராக்கிதானா ?


M. PALANIAPPAN, KERALA
ஏப் 22, 2025 12:23

ஒருவருக்கு ஒருவர் ஈகோ இல்லாமல் விட்டு கொடுத்து நல்ல முடிவில் 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் நாட்டிற்க்காக அயராது உழைக்கும் மோடிஜியின் கரத்தை வலுவடைய செய்ய வேண்டும்


Ramesh Sargam
ஏப் 22, 2025 12:06

செய்தியை கேள்விப்பட்ட திமுகவினருக்கு ....


SUBBU,MADURAI
ஏப் 22, 2025 12:42

Mainstream newsrooms know exactly what they are doing.


Barakat Ali
ஏப் 22, 2025 11:51

சட்டசபையில் முதல்வரைப் புகழ்ந்து அதிமுக எம் எல் ஏ க்களும் பேசணும், இல்ல பாடணும்.. அதுவும் ஆளுங்கட்சி எம் எல் ஏ க்கள் கூடக் கூசும் அளவுக்குப் பாடணும்.. அப்பத்தான் சபா மேனேஜர் அனுமதி கொடுப்பார் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை