உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆயுஷ் பாட புத்தகம் உருவாக்க என்.சி.இ.ஆர்.டி., - யு.ஜி.சி., கூட்டு

ஆயுஷ் பாட புத்தகம் உருவாக்க என்.சி.இ.ஆர்.டி., - யு.ஜி.சி., கூட்டு

சென்னை: பள்ளி மற்றும் கல்லுாரிகளில், சுகாதார கல்வி பாடத்திட்டத்தை சேர்க்க, ஆயுர்வேத பாட புத்தகங்களை உருவாக்கும் பணியில், என்.சி.இ.ஆர்.டி மற்றும் யு.ஜி.சி., இணைந்து செயல்பட உள்ளன. பள்ளி மற்றும் கல்லுாரிகளில், சுகாதார கல்வியை பிரதானமாக சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான பாடத்திட்டத்தில், நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் குறித்த பாடங்களை, 'ஆயுஷ்' என்ற பெயரில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான பாடப்புத்தகங்களை உருவாக்கும் பணியில், பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை வடிவமைக்கும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி., பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. ஆகியவை இணைந்து உள்ளன.இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு, ஆராய்ச்சி முடிவு சான்றுகள் வாயிலாக, சர்வதேச அங்கீகாரம் பெறும் முயற்சியில், ஆயுஷ் அமைச்சகம், மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில், மருந்து நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.உள்நாட்டில், அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க, பொது சுகாதார கட்டமைப்பை எளிமையாகவும், மலிவாகவும் வழங்கும் முயற்சியில், அரசு ஈடுபட்டுள்ளது.அதை, பாடத்திட்டங்களின் வாயிலாக கட்டமைக்கும் பணியில், ஆயுஷ் அமைச்சகம், என்.சி.இ.ஆர்.டி - யு.ஜி.சி.,யை இணைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Iyer
அக் 08, 2025 07:10

இன்று பலபேர் தற்கொலை செய்து கொண்டு இறப்பதற்கு காரணம் - 1. குணமாகாத வியாதிகளும் 2. அந்த வியாதிகளின் சிட்சைகளுக்கு ஆகும் கட்டுப்படி ஆகாத செலவுகளும் தான். ALLOPATHY ல் எந்த வியாதிக்கும் குணமாக்கும் தன்மை இல்லை. ALLOPATHY TREATMENT எடுத்துக்கொள்ளும் பெரும்பாலோர் - வீடு வாசல்களை விற்று - குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி - மிகவும் துன்பத்தில் - மரணமடைவதை காண்கிறோம். ஆகையால் - அல்லோபதி யை உடனே BAN செய்து நமது HEALTH பட்ஜெட் முழுவதும் ஆயுர்வேதம், தமிழர்களின் சித்த வைத்தியம் போன்றவற்றில் செலவிடவேண்டும்.


Iyer
அக் 08, 2025 07:03

"இதற்கான பாடத்திட்டத்தில், நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் குறித்த பாடங்களை, ஆயுஷ் என்ற பெயரில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது." மிகவும் பாராட்டவேண்டிய முடிவு 1. THEORY மட்டுமின்றி HERBAL செடிகொடிகளின் PRACTICAL ம் சேர்க்கவேண்டும். 2. தமிழர்களின் - சித்த மற்றும் இயற்கை வைத்தியமும் மிகசிறந்த சிகிச்சை முறை. அதையும் சேருங்கள் 3. CURE மட்டுமல்லாது PREVENTION ம் நம் தமிழர்களின் இயற்கை வைத்தியத்தின் முக்கிய அங்கம் ஆகும் 4. யோகா, பிராணாயாமம், த்யானம், சூர்யநமஸ்கரம் போன்றவை நம்மை ஆயுள் முழுவதும் வியாதி இல்லாமல் காப்பவை. அவற்றையும் THEORY மற்றும் PRACTICAL ல் சேர்க்க அவசியம்.


GMM
அக் 08, 2025 06:34

ஆரம்ப கால நோய் தடுப்பு, சிகிச்சைக்கு ஆயுர் வேத, சித்தா மருத்துவம் சிறந்தது. செலவு குறைவு. ஆயுஷ் பாட புத்தகம் அவசியம் உருவாக்க வேண்டும். தொழில் ஆர்வம் உள்ள மருத்துவர் தேர்வு செய்ய வேண்டும். இதன் பலன் நன்கு தெரியும். ராமதாஸ், அன்புமணி போல் இட ஒதுக்கீடு மூலம் படித்து பின் அரசியல் கட்சி துவங்கும் நபரை தவிர்க்க வேண்டும். கொஞ்ச காலம் மருத்துவ சேவை கட்டாயம் ஆக்க வேண்டும்.