உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாமானிய குடும்ப குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு: அண்ணாமலை பெருமிதம்

சாமானிய குடும்ப குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு: அண்ணாமலை பெருமிதம்

சென்னை: சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0po7axzj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றைய தினம், நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்கும் நீட் தேர்வு, தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது என்பது, ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது. தமிழகத்தில், மருத்துவக் கல்வி இடங்களை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்தியுள்ள பிரதமர் மோடி வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கையும் நிச்சயம் நிறைவேற்றுவார். வருங்காலத்தில் நீட் தேர்வு மூலம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது உறுதி. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

MADHAVAN
மே 06, 2024 10:38

அண்ணாமலை கூறுவது முற்றிலும் பொய், நீட் என்பது சாமான்ய மக்களை உயர்களி படிக்காமல் தடுப்பது மட்டுமே, நீட் கோச்சிங் கு நான்கு லட்சம் வாங்குறானுங்க, அங்க படிக்குற பிள்ளைகள் தான் பிரீ செஅட் கிடைக்குது,


Azar Mufeen
மே 06, 2024 00:43

இந்த தேர்வுக்கு எதுக்கு தலைமுடியை, தாலியை மற்றும் இன்ன பிற சோதனைகள் எதுக்கு எங்க வடக்கன்ஸ் மாதிரி ஜெய் ஸ்ரீ ராம்னு எழுதினால் பாசாக மாட்டோமா என்ன


கட்டத்தேவன்,,திருச்சுழி
மே 06, 2024 08:05

அப்படீன்னா அல்லாஹூ அக்பர்னு சொன்னா கண்டிப்பா பெயில்தானா? ஏன் இப்படி வன்மக் கருத்தை போடுகிறாய் உன் மதம் உனக்கு எப்படி உசத்தியோ அதே போல்தான் என் மதம் எனக்கு உசத்தி இனிமேலாவது விஷத்தை கக்காமல் கவனமாக கருத்தை போடு..


Bahurudeen Ali Ahamed
மே 05, 2024 21:32

நீட் தேர்வில் வெற்றிபெற்ற எல்லோருக்கும் பணம் இல்லாமல் சீட் கிடைக்கும் என்று கூற முடியுமா, இதற்கு முன் பிளஸ்டூ மார்க் மற்றும் கட் ஆஃப் மார்க் வைத்து சீட் கிடைத்து மருத்துவர்கள் ஆகியவர்களின் திறனில் ஏதாவது குறையுண்டா


Kalaiselvan Periasamy
மே 05, 2024 20:28

திராவிட அரசியல்வாதிகள் மகா முட்டாள்கள் என்பதையே நீட் எதிப்பு தெரிவிக்கிறது நீட் வேண்டாம் என்று சொல்பவர்கள் , தேர்தலும் வேண்டாம் என்று சொல்லுங்களேன் தரமற்ற திராவிடர்கள் தமிழர்களை சீரழித்து விட்டனர்


Bahurudeen Ali Ahamed
மே 06, 2024 19:18

தமிழ்நாடு எந்த விதத்தில் மற்ற வடமாநிலங்களை விட தாழ்ந்து போயுள்ளது என்று கூற முடியுமா கல்வி, மருத்துவம், தொழில் துறை, உள்கட்டமைப்பு, மத்திய அரசுக்கு வரி செலுத்துதல் போன்ற எல்லாவற்றிலும் பிஜேபி ஆளும் வடமாநிலங்களை விட பல மடங்கு எப்போதும் முன்னேறிய மாநிலமாகவே இருந்திருக்கிறது எப்போதும் அப்படிதான் இருக்கும்


ஜெய்ஹிந்த்புரம்
மே 05, 2024 17:25

நன்கு படிக்கும் நடுத்தர வர்க்க மற்றும், ஏழை மாணவர்கள் சாதாரணமாக மருத்துவராகி சாதனை புரிந்த காலம் காணாமல் போய், மருத்துவக்கல்லூரியில் சேருவதே சாதனை என்று மாற்றிய வேதனை


தாமோதரன்,கொட்டாம்பட்டி
மே 06, 2024 08:08

ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன்னு சொன்னவங்களிடம் போய் ஆட்சிக்கு வந்து மூணு வருஷம் முடிஞ்சிருச்சு இன்னும் ஏன் நீட்டை ஒழிக்கலைன்னு கேளு..


saravanan
மே 05, 2024 15:55

நீட் போன்ற போட்டி தேர்வுகளே ஒருவரின் திறமையை அடையாளம் கண்டு அவர்களின் தகுதியை ஊருக்கு உணர்த்துகின்றன வருங்கால மருத்துவர்களாக விழையும் மாணர்வர்களுக்கு தேவையான கடின உழைப்பும், தொழில் அர்ப்பணிப்பு உணர்வும் இருப்பதை கண்டறியும் முயற்சியே நீட் சோதனை தேர்வு மக்களின் உயிர் காக்க பணியாற்றும் உன்னத தொழிலில் ஈடுபடுபவர்கள் பவர்கள், இன்றளவும் எத்தனையோ ஊர்களில் கடவுளாக மதிக்க படுபவர்கள் எத்தகைய கடமையாளர்களாக இருக்க வேண்டும் இதற்கு கடின உழைப்பும் விடா முயற்சியுமே அடித்தளம் எத்தனையோ கிராமபுற மாணவர்களும், வறுமையில் உழன்றவர்களும் நீட் தகுதி தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர்களாக உயர்ந்ததும் இந்த தோதனை தேர்வின் மூலம்தான் பணம் தேவையில்லை மனமிருந்தால் போதும் வெற்றி உறுதி மருத்துராகும் முனைப்பில் இருக்கும் மாணவர்களின் உறுதியை குழைக்கவும் ஒரு கூட்டமே காத்து கொண்டிருக்கிறது அதை புறந்தள்ளிவிட்டு நீட் தேர்வை மகிழ்ச்சியோடு எதிர் கொண்டு வெற்றியை வசப்படுத்துங்கள்


Saai Sundharamurthy AVK
மே 05, 2024 15:11

நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் ?


Rpalnivelu
மே 05, 2024 15:04

தமிழகத்தில் இவர் ஒருவரே நீட்டை ஆதரித்துக் கொண்டிருப்பவர் திருட்டு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை