உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் அலட்சியம்: சாகசம் என்ற பெயரில் சிறுவன் கையில் தீ பற்றியதால் அதிர்ச்சி

நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் அலட்சியம்: சாகசம் என்ற பெயரில் சிறுவன் கையில் தீ பற்றியதால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : நடிகர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சிறுவன் ஒருவனை சாகசம் செய்ய வைக்க நினைத்து அவர் கையில் தீ பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி, அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் அவர் களம் காண உள்ளார். இன்று (ஜூன் 22) தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதையும் மீறி சிலர் கொண்டாடி வருகின்றனர்.சென்னை, நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் சிறுவன் ஒருவன், நெருப்பில் எரியும் ஓடுகளை உடைக்கும் சாகசம் நடத்தப்பட்டது. அப்போது சிறுவன் கையில் பெட்ரோலை ஊற்றி நெருப்பை பற்ற வைத்தனர். ஓடுகளை உடைத்த பின்னரும் சிறுவன் கையில் பற்றிய தீ அணையாததால் அவர் வலியால் அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் சிறுவனுக்கும், அவர் அருகில் இருந்த விஜய் கட்சியின் நிர்வாகி ஒருவருக்கும் லேசான தீ காயம் ஏற்பட்டது.விஜய்யே பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் அதை கேட்காத அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சாகசம் என்ற பெயரில் சிறுவன் கையில் நெருப்பை பற்ற வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

naranam
ஜூன் 22, 2024 20:10

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே தம்பி


Barakat Ali
ஜூன் 22, 2024 18:31

சம்பவத்தை வெச்சு விசாரிக்க போலீசு எட்டிக்கூட பார்க்கலீங்களா ????


theruvasagan
ஜூன் 22, 2024 16:00

ஆச்சரியப்பட ஒண்ணுமே இல்லை. வெற்றிக்கழகத்தில் மெம்பராக இருக்கிறவனுக வெட்டி ஆட்களாகத்தானே இருக்க முடியும்.


Kumar Kumzi
ஜூன் 22, 2024 15:52

கூத்தாடிகளை தலையில் வைத்து கொண்டாட கூடாது


S.kausalya
ஜூன் 22, 2024 15:28

இந்த நிலைக்கு ஆளாக்கிய எல்லோரும் சாகலாம் நாடு எப்படி முன்னேறும். நாளையே நடிகனின் படத்திற்கு பிரச்சனை என்றால் நவ துவாரத்தையும் மூடி கொண்டு ஆட்சியாளர் பக்கம் சேர்வான். காதல் காட்சி தவிர மற்றது எல்லாம் துணை நடிகனின் உழைப்பு.இவங்களை நம்பும் மடமை பிடித்தோரை என்ன சொல்ல


முருகபாலன்
ஜூன் 22, 2024 15:13

வெற்றி...வெற்றி..வெற்றி கழகத்துக்கு வெற்றி.


Iniyan
ஜூன் 22, 2024 14:24

முட்டாள்கள் நிறைந்த தமிழ்நாடு. திராவிட இயக்கங்கள் மக்களை கெடுத்து விட்டன


Venkatasubramanian krishnamurthy
ஜூன் 22, 2024 14:13

இதுதான் திராவிட மாடல் ௨.௦. புதிதாகக் கிளம்புகிற எவனொருவனும் புதிய சிந்தனைகளோடு வரவே மாட்டான். இன்னும் ஐம்பது வருடங்களானும் தமிழகம் உருபப்படாது என்பதற்கான அடையாளங்கள் இவர்கள்.


Velan
ஜூன் 22, 2024 13:57

இவனுக தான் நாளைய இந்தியா ?


Anand
ஜூன் 22, 2024 13:55

இவனெல்லாம் ஒரு ஆளுன்னு, இவன் பொறந்ததே வேஸ்ட், பிறந்தநாள் விழா வேறு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை