உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மருத்துவமனையில் அலட்சியம்; எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் கொடுத்த சம்பவத்தால் அதிர்ச்சி!

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் கொடுத்த சம்பவத்தால் அதிர்ச்சி!

தென்காசி: தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரேக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கையில் எலும்பு முறிவு என, வந்த நோயாளிக்கு, எக்ஸ்ரே பிலிம்க்கு பதிலாக மருத்துவமனை ஊழியர்கள் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த காளி பாண்டி என்பவர் ஹோட்டல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். டாக்டர் 'எக்ஸ்ரே' எடுக்க கூறிய நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 'எக்ஸ்ரே' மையத்தில், 'எக்ஸ்ரே' எடுத்துள்ளார்.இந்நிலையில் எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பிலிமுக்கு பதிலாக, ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தனர். இது குறித்து காளி பாண்டி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது பிலிம் தீர்ந்து விட்டதாக அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். அவர் டாக்டரிடம் காண்பிக்க சென்றுள்ளார். டாக்டர்கள் இல்லாத காரணத்தினால் வீடு திரும்பினார்.பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே ரிப்போர்ட்டாக கொடுக்கப்பட்ட ஜெராக்ஸை காட்டியுள்ளார். அங்கு ஜெராக்ஸ் வைத்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுப்பு தெரிவித்தனர். 'சாமானிய மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடும் நிலையில் இத்தகைய அலட்சியப் போக்கான நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது' என காளி ராஜ் வருத்தம் தெரிவித்தார்.இது குறித்து தென்காசி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமலதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுப்பதற்கு அனைத்து வசதிகளும் உள்ளது. மேலும் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுப்பதற்கு தேவையான அளவில் பிலிம் ரோல்கள் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளின் எக்ஸ்ரே விவரங்கள் டிஜிட்டல் மூலமாக பரிந்துரை செய்யும் டாக்டர்களுக்கு இணையத்தில் அனுப்பி வைக்கப்படுவதால் அவர்கள் கம்ப்யூட்டரில் அதனை தெளிவாக பார்த்து நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

manikandan aiyaswami
நவ 11, 2024 05:31

la x-ray machine digital method, without x-ray film we can get x-rays . most Govt hospitals digital X-ray machine avialble, the private hospital doctor earning money , they telling paper copy or digital x-ray copy your mobile, storage devices pen drive, etc not able read. In most of private clinics only old x-ray m/c which higher radiation dose. la m/c adv stages. pl under stand and publish news.


Susi Palani
நவ 10, 2024 20:45

கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையிலும் என்னுடைய கால் எலும்பு முறிவுக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே ஜெராக்ஸ்தான் கொடுத்தார்கள்.இதற்கு கட்டணம் இல்லை.


Ramesh Sargam
நவ 10, 2024 13:59

முதல்வரிடம் இதைப்பற்றி புகார் சொன்னால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரண்டே வார்த்தைகளில் பதில் சொல்வார். அவ்வளவுதான். அல்லது அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று ஒரேயடியாக பொய் சொல்வார்.


Barakat Ali
நவ 10, 2024 12:37

இதுசொறியான் மண்ணு .... இது முன்னேறிய மாநிலம் .... இது மற்ற மாநிலங்களுக்கு வழி காட்டும் மாநிலம் .... இது முன்னுதாரண மாநிலம் ....


sankar
நவ 10, 2024 11:16

அருமையான டெவெலப்மென்ட் - மார்தட்டிக்கொள்ளலாம்


nagendhiran
நவ 10, 2024 10:58

விடியல் சாதனையில் இது ஒரு மைல்கல்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை