உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே திடீர் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது.திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் திண்டுக்கல் அருகே வந்த போது திடீரென ஏ.சி.யில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zl9ehu4s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் திண்டுக்கல் அருகே வந்த போது திடீரென ஏ.சி.யில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.ஏ.சி.யில் இருந்து புகை கிளம்பியதால் வடமதுரை அருகே வேல்வார்கோட்டை என்ற இடத்தில் அரை மணி நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி பின்னர் ரயிலின் வேகத்தை அதன் ஒட்டுநர்கள் குறைத்து திருச்சிக்கு கொண்டு சென்றனர்.அங்கு காத்திருக்கும் பொறியாளர்கள் மூலம் பிரச்னையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

குப்பு
ஜூலை 09, 2025 17:13

யாராவது வடக்கன்ஸ் டீ போட அடுப்பு பற்ற வெச்சிருப்பான். நல்லாப் பாருங்க


Ram
ஜூலை 09, 2025 14:01

ரயிலின் உள்பகுதியில் பராமரிப்பு சரியில்லை …தேவையில்லாமல் ரொம்ப காமியாக வைப்பது தேவையில்லை


SANKAR
ஜூலை 09, 2025 13:34

thiruttu theeyamooka aatchiye kaaranam.railway illai!


Anantharaman Srinivasan
ஜூலை 09, 2025 11:20

வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம். ஆனைக்கும் அடிசறுக்கும். என்ன உயர் ரக இரயில் என்றாலும் சரியான பராமரிப்புயில்லை என்றால் பிராபளம் வரும்.


தனவேல்
ஜூலை 09, 2025 11:11

23 - 24 டிகிரி குளிர வெச்சாலே போதும். இவனுங்க அதை 19-20 க்கு கீழே வெச்சு, சக்தியை வீணாக்கி, உக்கே இருக்குறவங்களையும் விரைக்க வெச்சுடறாங்க. குளிர் தாங்காம நிறைய பேர் பாதி நேரம் வெளியே நிக்கிறங்க . கொடியசைச்சு ஆரம்பிச்சு வெச்சவங்க யாரும் இந்த ரயிலில் போகமாட்டாங்க. அவ்ளோ மட்டமா இருக்கு.


V Venkatachalam
ஜூலை 09, 2025 14:39

தன் வேல் அண்ணன் புதுசா ஒண்ணு சொல்றாவோ. அது என்னான்னா கொடி அசைத்து ஓட விட்டவங்க அதே வண்டியில் பயணம் செய்யணுமாம். ஆமா கொடியசைத்து வண்டிய ஓட விட்டவுக மத்தவுக அந்த வண்டியில் போகணும் அப்புடீங்குறதுக்குதானே வண்டிய ஓட விடுறாங்க. தான் போறதுக்கு இல்லையே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை