உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை கோர்ட் முன்பு அரங்கேறிய கொலை! 7 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

நெல்லை கோர்ட் முன்பு அரங்கேறிய கொலை! 7 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லை: நெல்லையில் நீதிமன்ற வளாகம் முன் நடந்த கொலை வழக்கில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் கீழ்நத்தம் மேலூரைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் தம் மீதான வழக்கு ஒன்றில் விசாரணைக்காக ஆஜராக கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி நீதிமன்றம் வந்திருந்தார். நீதிமன்றம் வெளியே உள்ள டீக்கடை ஒன்றில் நண்பர் ஒருவருடன் டீ குடித்துக் கொண்டு இருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட, ஓட துரத்தி அரிவாளால் வெட்டிச் சாய்த்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0wklj078&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் விமர்சனங்களை முன் வைத்தது. கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் ராஜாமணி என்பவர் படுகொலைக்கு பழிவாங்க இந்த கொலை அரங்கேறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந் நிலையில் கைது செய்யப்பட்ட 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
ஜன 21, 2025 17:40

சார் .... சார் ..... இரும்புக் கை சார் ...... என்ன சார் இதெல்லாம் ??


Ramesh Sargam
ஜன 21, 2025 12:57

குண்டர் சட்டத்தின் கீழ் என்றைக்கு தண்டனை கிடைக்கும்? குற்றவாளிகள் நூறு வயதாகும்போதாவது கிடைக்குமா? நூறு வயது அடைந்தபிறகு, வயது மூப்பு காரணமாக தண்டனை நிறைவேற்றப்படாது. அதுதானே உங்கள் எண்ணம்.


சம்பா
ஜன 21, 2025 12:50

சீக்கிரம் வெளிய வந்து ருவானுக


அப்பாவி
ஜன 21, 2025 12:31

2047 க்குள்ளாற நீதி கிடைச்சுரும். என்ன நீதி? இதுக்கு முன்னாடி வெட்டுனவனை தண்டிச்சிருந்தாத்தானே? நீதித்துறை மீது நம்பிக்கை இல்லாமப் போய்தான் இது மாதிரி சம்பவங்கள் நடக்குது.


Dharmavaan
ஜன 21, 2025 12:28

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது இது பாதுகாப்பா கேவலமான அறிக்கை அவனும் லஞ்சம் வாங்கியிருப்பான்


Ramona
ஜன 21, 2025 12:25

வழக்கம் போல குண்டர் சட்டம் பாயும், பிறகு கனம் கோர்ட்டார், அந்த சட்டத்தை உடைத்தெரியும், இதுபோன்ற பல நடந்துள்ளதே ,ஆச்சரியமான விஷயமல்ல இது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை