உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிர் பிரிந்தது!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிர் பிரிந்தது!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (56) உடல் நலக்குறைவால் இன்று (ஜன.,12) உயிரிழந்தது. தாமரைக்குளம் பகுதியில் யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது.திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்த பெற்ற, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சுவாமி அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இந்த கோவிலில் https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8lz7uasv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உள்ள யானை காந்திமதி 56, உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்தது. இக்கோயில் விழாக்கள், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் சுவாமிக்கு முன் காந்திமதி செல்லும்.நன்கொடையாளர்களால் 1985ல் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக காந்திமதி உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக யானை நின்றவாறே துாங்கியது. படுத்த யானையால் மீண்டும் எழ முடியவில்லை. எனவே கோயில் அதிகாரிகள், கால்நடைத்துறை டாக்டர்கள் முன்னிலையில் யானை கிரேன் பெல்ட் மூலம் கட்டி துாக்கி நிறுத்தப்பட்டது. எனினும் நிற்க முடியவில்லை.இந்நிலையில், இன்று (ஜன.,12) நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. காந்திமதி, நெல்லை மக்களின் அன்பைப் பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காந்திமதி யானையை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். காந்திமதி யானைக்கு, அன்போடும், பாசத்தோடும் உணவுப்பொருட்களை நெல்லை மக்கள் வழங்கி வந்தனர். காந்திமதி மறைவைத் தொடர்ந்து, பக்தர்கள் கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் நேரு மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செய்ததைத் தொடர்ந்து யானையின் உடல் தாமரைக்குளம் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.கோவில் யானை இறப்பு காரணமாக நெல்லையப்பர் கோவிலில் இன்றைய பூஜைகள் காலையுடன் நிறுத்தப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு யானையின் இறுதி சடங்கு, பரிகார பூஜை முடிந்த பிறகே கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

RAMAKRISHNAN NATESAN
ஜன 12, 2025 18:27

ஓம் ஷாந்தி .....


கிஜன்
ஜன 12, 2025 12:09

காந்திமதி.... அம்மனைப்போலவே ....அமைதியான யானை.... கடந்தமுறை சென்று பார்த்தபோது.. தன் முன்னாள் கிடந்த புற்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தது.. சற்று தள்ளி நின்று கும்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்.. 1985க்கு முன்னாள் நயினார் என்றொரு யானை இருந்திருக்கிறது.. போட்டோ வைத்திருப்பார்கள்.. அதிகம் அவஸ்தையில்லாமல் சென்றுவிட்டால்.. சாந்தி அடையட்டும்... சீக்கிரம் கோவிலுக்கு ஒரு குட்டி யானை வர வேண்டும்.. யானை இல்லாத உட்பிரகாரத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை ...


Ramesh Sargam
ஜன 12, 2025 11:25

மிகவும் வருத்தமான செய்தி. கோவில் யானை காந்திமதி அந்த நெல்லையப்பர் நிழலில் உறங்க சென்றுள்ளான். அவ்வளவுதான். ஓம் ஷாந்தி.


Sampath Kumar
ஜன 12, 2025 11:00

வருந்து கிண்டறேன் ஆன்ம சாந்தி அடைய வேண்டுகிறேன் இதுக்கும் காரணம் திராவிட மாடல் ஆட்சி தான் என்று பிஜேபி சொம்புகள் சங்கு ஊதும்


சின்ன சுடலை
ஜன 12, 2025 11:23

நீ தான் சொல்கிறாய்? சொம்பு பத்திரம்.


ramesh
ஜன 12, 2025 10:58

பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த காந்திமதி யானை தன் பணி முடிந்து விண்ணுலகில் நெல்லையப்பர் ,காந்திமதி அம்பாளிடம் சென்று சேர்ந்து விட்டது.


ramesh
ஜன 12, 2025 10:54

நெல்லையப்பர் கோவில் யானை மறைவு எங்களை போன்ற நெல்லையை பூர்விகமாக கொண்ட இந்துக்கள் அனைவருக்கும் பெரிய இழப்பு ஆகும். ஓம் சாந்தி ,ஓம் சாந்தி ,ஓம் சாந்தி.


Venkat
ஜன 12, 2025 10:40

ஓம் சாந்தி ?


பெரிய ராசு
ஜன 12, 2025 10:23

கைலாசபதி பதவி அடைந்த காந்திமதி...ஓம்நமச்சிவாய


Palanisamy Sekar
ஜன 12, 2025 09:44

இந்து மதத்தில் மட்டும்தான் எல்லா உயிர்கள் மீதும் பாசம் வைத்துள்ளார்கள். குறிப்பாக யானைகளின் கோவிலில் செய்கின்ற சேவையானது அணைத்து பக்தர்களின் அன்பை பெற்று பக்தியோடு வணங்கி செல்வர். அப்படிப்பட்ட யானைகளில் காந்திமதியின் சேவையானது மகத்தானது போற்றத்தக்கது. இறைவனின் சேவையில் மனம் மகிழ்ந்த காந்திமதி அன்னையின் திருப்பாதங்களில் இளைப்பாற சென்றுவிட்டாள். கண்ணீர் மல்க விடைகொடுப்போம்.


sundarsvpr
ஜன 12, 2025 09:42

யானை குதிரை ஒட்டகம் முதயவைகள் சுவாமி புறப்பாட்டிற்கு முன் அலங்கரித்தி செல்லும் அழகை வருணிக்கமுடியாது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்ப்பார்கள். பெரியவர்கள் கரும்பு பழம் கொள்ளு போன்றவை அளிப்பார்கள். இப்படிப்பட்ட அழகு தற்போது இல்லை. இதனை அரசு செய்யாது. ஆதீனங்கள் மடாதிபதிகள் திருக்கோயில்கள் செல்லலாம். இதனை இவர்கள் செய்யமுடியும். யானைகளுக்கு கவளமாய் கவளமாய் அன்னம் வாய் வழியாய் கொடுப்பார்கள். இதனை காண்பவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தையில் கூறமுடியாது. உயிர் பிரிந்த யானைக்கு மக்கள் நல்ல மரியாதை செய்யவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை