மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
16 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
27 minutes ago
வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழை
43 minutes ago
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோவிலின் 507வது தேரோட்டம், இன்று காலை நடக்கிறது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், கடந்த 4ம் தேதி ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள், வீதி உலா நடந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளுகின்றனர். அதைத் தொடர்ந்து அதிகாலையிலேயே விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடக்கிறது. காலை 7.40 முதல் 8.15 மணிக்குள்ளாக சுவாமி தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து, அம்பாள் தேர், சண்டிகேஸ்வர் தேரோட்டம் நடக்கிறது. ஒரே நாளில் தேரை நிலைக்கு கொண்டுவரும் வகையில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
16 minutes ago
27 minutes ago
43 minutes ago