உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோற்றோரும் பாராட்டிய நடுநிலை

தோற்றோரும் பாராட்டிய நடுநிலை

தேர்தல் நடக்கும் போது, கட்சிகள் தேர்தல் அலு வலகம் என்ற பெயரில் ஒரு இடத்தை பிடித்து, செயலகமாக மாற்றி ஓட்டுப்பதிவு முடியும் வரையில் சுறுசுறுப்பாக இயங்குவதை பார்த்திருப்பீர் கள். அதற்கு போட்டியாக தினமலர் தேர்தல் அலுவலகங் கள் செயல்படுவதை சிலர் தான் பார்த்திருக்க முடியும்.தேர்தல் களம் என்ற பெய ரில் தினமலர் இதழில் தனி பக்கங்கள் ஒதுக்கப்பட்டு, செய்திகள் படங்கள் சிறப்பு கட்டுரைகளால் நிரம்பி வழியும். போட்டியிடும் அத்தனை கட்சி களுக்கும் அவரவர் பலம், செல் வாக்கு, ஆதரவுக்கு பொருத்த மாக பத்திரிகையில் நிச்சயமாக செய்திகள் வெளியாகும்.சிறு கிராமங்களில் கூட தினமலர் நிருபர்கள் இருந்தபடி யால், தேர்தல் செய்தி சேகரிப் புக்கு தேவையான இடங்களில் நிருபர் படையை இறக்குவது சிரமமாக இருந்ததில்லை.தேர்தல் களம் பக்கங்களில் வெளியாகும் சிறப்பு செய்தி கள், படங்கள் காரணமாக தினமலர் விற்பனை அந்த காலகட்டத்தில் வெகுவாக அதிகரிப்பது வழக்கம். இதன் எதிரொலியாக இப்போதெல் லாம் அனைத்து பத்திரிகை களும் தேர்தல் களம் பகுதியை உருவாக்கி, அதிக செய்திகளை பிரசுரிக்கின்றன.என்றாலும், இந்த விஷயத் தில் முன்னோடியான தினமலர், தேர்தல் களத்தில் நிகழ்த்தியசாதனைகள் ஏராளம். திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். புதிதாக தொடங் கிய அதிமுக முதல் முறையாக திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்த லில் களத்தில் இறங்கியது.அப்போது மிகப்பெரிய சக்தியாக விளங்கிய திமுக, தன் புதிய எதிரியின் பலத்தை உணராமல் நடிகர் கட்சி என கேலி செய்தது. பெரும்பாலான பத்திரிகைகளும் அதையொட்டி செய்திகள் வெளியிட்டு வந்த நேரத்தில், அதிமுகவின், குறிப் பாக எம்.ஜி.ஆரின் பிரசாரத்தை முழுமையாக கவர் செய்ய நிருபர் பட்டாளத்தை கொண்டு வந்து இறக்கியது தினமலர்.ஒவ்வொரு கட்சியின் முக் கிய தலைவருக்கும் வேட்பா ளருக்கும் தனித்தனி நிருபர், போட்டோகிராபர் நியமிக்கப் பட்டு செய்தி சேகரித்து வெளி யிடப்பட்டது.அபார வெற்றி பெற்ற அதி முக வேட்பாளர் அந்த வெற் றிக்காக முதல் நன்றியை தன் தலைவருக்கும், இரண்டாவதாக வாக்காளர்களுக்கும், அடுத்து தினமலர் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தார். வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பா ளர்களும் அவர்களின் தலை வர்களும் கூட தினமலரின் பாரபட்சம் இல்லாத செய்தி வழங்கலை அங்கீகரித்து பாராட்டவும் செய்தார்கள் என் பது அப்போது கண்ட அபூர்வ மான அரசியல் நாகரிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை