உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி வெளியிட்ட புதிய லோகோ: விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி

உதயநிதி வெளியிட்ட புதிய லோகோ: விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: அமைச்சர் உதயநிதி வெளியிட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய 'லோகோ' குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கென, 1996 முதல் ஒரு லோகோ பயன்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் திருப்பூர் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, புதிய லோகோ வெளியிட்டார்.அது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: முந்தைய லோகோவில் தடகள விளையாட்டு வீரர் நின்றிருப்பது போன்று இடம் பெற்றிருக்கும். எந்த ஒரு விளையாட்டையும் முன்னிலைப்படுத்தாமல் விளையாட்டு வீரர் என்பதை மட்டுமே தெரிவிப்பதாக இது இருந்தது.உதயநிதி வெளியிட்டுள்ள லோகோவில், வாலிபால், பளு துாக்குதல், சதுரங்கம், டென்னிஸ், கால்பந்து, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளின் வடிவமைப்பு இடம் பெற்றுள்ளது.கோகோ, டென்னிகாய்ட், நீச்சல், எறிபந்து, ஹேண்ட்பால், வில்வித்தை, சைக்கிளிங், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், கேரம், யோகா உள்ளிட்டவை இடம் பெறவில்லை. ஆணையம் சார்பில் 30க்கும் மேற்பட்ட விளையாட்டுகளுக்கு போட்டி நடத்தப்படும் நிலையில், குறிப்பிட்ட, 13 விளையாட்டுகள் மட்டுமே புதிய லோகோவில் இடம் பெற்றுள்ளன. இது விளையாட்டு ஆர்வலர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முழுமையாக கருத்துக் கேட்டு பின், புதிய லோகோ வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

SRINIVASAN
ஜூன் 28, 2024 14:54

நல்லா பாருங்க ஜி லோகோவே உதய சூரியன் தான். கோடைகாலம் போய்விட்டதால் சூரியக்கதிரின் நீளம் குறைஞ்சிடுச்சு. பிறகு அந்த மஞ்சள் - தாத்தாவின் சால்வை ஞாபகமாக. நீலம் - அவருடைய நட்சத்திர ராசிப்படி


Shanmugam
ஜூன் 28, 2024 09:57

What can you expect from useless udhayanidhi? He came in nepotism to politics without any talent and experience....


KARTHIK PONNUMANI
ஜூன் 28, 2024 07:58

இந்த அடையாளம் பற்றி கருத்து கூற நினைப்பதை விட இங்கே மற்றவர்கள் கூறிய கருத்துக்களை பார்க்கும் போது நான் பாடத்தில் படித்த ஒரு வரியான தமிழ் இனி மெல்லச் சாகும் என்பது நினைவுக்கு வருகிறது


SVK SIMHAN
ஜூன் 28, 2024 07:55

வானரங்கள் கையில் கசங்கிய பூமாலை: முதலைகள் வாயில் சிக்கிய உயிர் போல தமிழ்நாடு மனித இயல்பு பிறழ்ந்து மயானமாகி விட்டதற்கு பிறகு, நல்லது, அறிவு, தர்மம், நியாயம், நேர்மை எல்லாம் வீண் ??????


ramani
ஜூன் 28, 2024 06:09

சொன்னாதான் தெரிகிறது லோகோ என்று. ஏதோ வயலில் ஆங்காங்கே நெல் நாட்டிற்காங்க என்ற நினைப்பு தான் வருது


பச்சையப்பன் கோபால் புரம்
ஜூன் 27, 2024 23:24

கறுப்பும் சிவப்பும்தான் திராவிட நிறம். அது இல்லாமல் மஞ்சள் நீலமெல்லாம் கைபோ பார்ட்டிகள் நிறமாக்கும். .உடணடியாக உதய்ணா தலையிட்டு திராவிட நிறத்தில் பகூத்தறிவு பலகவன் படத்துடன் புதியஸசின்னம் வெளியிட்டால் மட்டுமே மரத்தஷதமிழன் பதக்கங்களை அள்ளிக் கொண்டு வருவான்.


bal
ஜூன் 27, 2024 22:49

இவர்,இவருடைய அப்பன், பாட்டன் பகுத்தறிவுள்ள முட்டாள்கள்.


S. Narayanan
ஜூன் 27, 2024 20:17

சின்ன பையனுக்கு என்ன தெரியும்.


sankaranarayanan
ஜூன் 27, 2024 20:14

இதில் கலைஞர் சின்னம் இல்லாமலிருப்பதே மிகவும் வியப்பாக இருக்கிறதே உடனே உதய சூரியன் சின்னமும் கலைஞர் பேனாவுடன் உள்ள சின்னமும் இதிலே அமைய வேண்டும்


thamizhan
ஜூன் 27, 2024 20:10

vidunga sir sinna paiyan thaana


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ