உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒன்பது கட்சிகளை ஒருங்கிணைத்து நேபாளத்தில் புதிய கட்சி உருவானது

ஒன்பது கட்சிகளை ஒருங்கிணைத்து நேபாளத்தில் புதிய கட்சி உருவானது

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாமல் பிரசண்டா தலைமையில், ஒன்பது கட்சிகள் ஒருங்கிணைந்து புதிய கட்சியை துவக்கியுள்ளன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது, ஊழல், வாரிசு அரசியலுக்கு எதிராக திரும்பியதுடன் போராட்டங்கள் தீவிரமாகி வன்முறையாக மாறியதால், பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல கட்சிகள் உள்ள நேபாளத்தில், கடந்த பல ஆண்டுகளாக கடும் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகின்றன. கட்சிகள் மாறி மாறி ஆதரவு அளிப்பது, திரும்பப் பெறுவது என்று சதுரங்க விளையாட்டு நடந்ததால், பல ஆட்சி மாற்றங்களை நாடு சந்தித்து வந்தது. இளைஞர்கள் போராட்டம் தொடர்ந்து நடக்க உள்ளது என்பதால், வரும் பொதுத்தேர்தல் மிகக் கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாமல் பிரசண்டா தலைமையி லான, நேபாள கம்யூனிஸ் ட் - மாவோயிஸ்ட் சென்டர் கட்சி தலைமையில், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்து வந்தன. இதன் தொடர்ச்சியாக, தற்போது, ஒன்பதுகம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து, 'நேபாள கம்யூனிஸ்ட் கட்சி' என்ற பெயரில் இயங்க உள்ளன. இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி காத்மாண்டுவில் நேற்று நடந்தது. நேபாள கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த சோஷலிஸ்ட், நேபாள சமாஜ்பாடி, நேபாள ஜனதா சமாஜ்பாடி, நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் சோஷலிஸ்ட் உள்ளிட்ட கட்சி கள் இணைந்துள்ளன.சீன ஆதரவு கொ ள்கை உடைய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்திருப்பது, இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Raj
நவ 06, 2025 10:06

இண்டி கூட்டணி போல சிதறிவிடும் சில காலங்களில். கூட்டணி என்றும் நிரந்தரம் இல்லை. கருத்து வேறுபாடு நிச்சயம் இருக்கும். இரண்டு மாடு பூட்டிய வண்டியே ஒரு பக்கம் இழுத்து கொண்டு போய்கிறது, இது ஒன்பது எப்படி இருக்கும்.


GMM
நவ 06, 2025 07:36

நேபாளம் உலகில் இசுலாமிய, ஆங்கிலேய ஆக்கிரமிப்பு குழுக்களால் நெருங்க முடியாத ஒரு இந்து மன்னர் ஆட்சியாக திகழ்ந்தது.


duruvasar
நவ 06, 2025 07:24

அராஜக கூட்டம் .அட்டுழியங்கள் இன்னும் அதிகமாகும்


nagendhiran
நவ 06, 2025 05:55

உண்டியல்ஸ் பருப்பு வெகு நாட்கள்?வேகாது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை