உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமானுக்கு புதிய பாஸ்போர்ட்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சீமானுக்கு புதிய பாஸ்போர்ட்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி, புதிய பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட நிலையில், தனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்றும், தன் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குகள் போடப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.இன்று நடந்த இந்த வழக்கு விசாரணையில், சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தெற்கத்தியான்
ஜூலை 22, 2025 19:34

Passport வழங்குவது External Affairs Ministry இன் சுதந்திரத்திற்கு உட்பட்ட விஷயம் இதில் தேசிய பாதுகாப்பு, தனி நபரின் குற்றவியல் பதிவுகள், தேச விரோத பேச்சுகள்/செயல்கள் உள்ளிட்ட பல காரணிகள் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும் சீமான் பட்டவர்தமான விடுதலை புலிகள் அபிமானி. மேலும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பல பிரிவினை கருத்துகளை கடந்த காலத்தில் தயக்கமின்றி பேசி உள்ளார் இதில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எந்த அடிப்படையில் இது போன்ற விஷயங்களில் நீதிமன்றங்கள் மூக்கை நுழைக்கலாம். நல்லதே இல்லை.


என்றும் இந்தியன்
ஜூலை 22, 2025 17:50

"நிதி" கொடு "நிதி" மன்றம் நீ என்ன கேட்கின்றாயோ அதன்படி தீர்ப்பு கொடுக்கும் என்று தெள்ளத்தெளிவாக தெரிகின்றது இதனால்


முக்கிய வீடியோ