உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அர்ச்சகர் நியமன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

அர்ச்சகர் நியமன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

ஆகம விதிகளுக்கு முரணாக, கோவில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரிஅனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் கூறியுள்ளதாவது:அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை, 2006ல் தமிழக அரசு பிறப்பித்தது.அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சி வாயிலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தற்போது வரை முறையான பணி நியமனம் நடைபெறவில்லை. ஏற்கனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால்,தற்போது வரை அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற நுாற்றுக்கணக்கானோர் பணி அமர்த்தப்படாமல் உள்ளனர்.இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடித்து, உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கில் தங்களது தரப்பின் இந்த புதிய இடையீட்டு மனுவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
மே 14, 2025 14:18

சமீப காலத்தில் மதசார்பின்மை என்பது ஹிந்து மதசார்பின்மை என்றாகிவிட்டது. அறநிலையத்துறை சட்டப்படி நிதி மேலாண்மை தவிர வேறெந்த ஆலய நடவடிக்கை நிகழ்வுகளிலும் தலையிட அரசுக்கு அதிகாரமில்லை. அர்ச்சகர் நியமனத்தில் உறுதியாக கோர்ட் தலையிட மறுக்க வேண்டும்.


visu
மே 14, 2025 14:01

இவர்களுக்கெல்லலாம் பாழடைந்துள்ள பராமரிப்பில்லாத ஹிந்து கோவில்களுக்கு தொகுப்பூதியமாக 3000 ரூபாய் அளித்து பயிற்சிக்கு அனுப்பலாம் அவர்கள் அந்த கோவில்களை நல்லபடி ஆர்வத்தோடு ஒரு 3 வருடம் கவனித்து வந்தால் மேற்கொண்டு யோசிக்கலாம் .இவர்களுக்கு வருமானம் உள்ள பெரிய கோவில்களில்தான் வேலை வேண்டும் என்று கோவில் பணத்தை சுரண்ட காத்து கொண்டுள்ளனர்


ஆரூர் ரங்
மே 14, 2025 13:49

போப்பாண்டவர் நியமனத்தில் இடஒதுக்கீடு கேட்கலாம். அரசு காஜியாக ஷியா, தாவூதி போரா, அகமதியா பிரிவினரும் நியமிக்கப்பட வேண்டும். முக்கியமாக ஒரு சாதிக்கு ஒரு நூற்றாண்டில் ஒரு தடவைக்கு மேல் முதல்வர் பதவியை தரக்கூடாது என்றெல்லாம் கேட்கலாமே. மற்றவர்களுக்கும் வாய்ப்பு தருவதுதான் நியாயம்.


Sundar R
மே 14, 2025 12:20

திமுக, நாதக, தவெக, விசிக, மதிமுக மற்றும் மநீம ஆகிய கட்சிகள் கிறிஸ்தவ மிஷனரி கட்சிகள். ஹிந்துக்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத இந்த கட்சியினர் தான் ஹிந்து கோயிலுக்குள் நடக்கும் நடைமுறைகளுக்கு எதிரான வகையில் பேசுகிறார்கள். நடந்து கொள்கிறார்கள். இவர்கள் கையில் ஆட்சி இருப்பதனால், இவர்கள் நம் பொதுமக்கள் வரிப்பணத்தை நாசமாக்கும் வகையில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு தொடர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். நம் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து ஹிந்துக்களும் மேற்கூறிய கிறிஸ்தவ மிஷனரி கட்சியினருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து ஹிந்து மக்கள் விஷயத்தில் இந்த கிறிஸ்தவ மிஷனரி கட்சியினர் தலையிடக்கூடாது என்று முறையிட்டால் ஹிந்து மக்களுக்கு எதிரான இந்த கிறிஸ்தவ மிஷனரி கட்சியினர் ஓடிவிடுவார்கள். ஹிந்துக்களுக்குள்ளே ஏதாவது பிரச்சினை இருந்தால், அதை மேற்கூறிய கிறிஸ்தவ மிஷனரி கட்சிகளைத் சாராத, அதிலும் குறிப்பாக திமுக கொம்பாக இல்லாத ஹிந்துக்களே அமைதியான முறையில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.


sribalajitraders
மே 14, 2025 09:40

அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்


sundarsvpr
மே 14, 2025 13:08

சட்டம் நிறைவேற்றுங்கள். இந்த சட்டம் புதிதாய் கட்டப்படும் திருக்கோயில்களுக்கு மட்டும் பொருந்தும். ஆகம விதிப்படி நடக்கும் திருக்கோயில்களை அரசு மாற்றாந்தாய் கண்ணுடன் பார்த்தல் சரியாய் இருக்காது.


sundarsvpr
மே 14, 2025 08:45

அர்ச்சகக்கராக வேண்டும் ஆசைப்படுபவர்கள் தங்கள் வீட்டில் தெய்வ திருமேனிக்கு அலங்காரம் நெய்வேத்தியம் செய்து வழிபடுவதால் ஏற்படும் மனநிறைவு தான் திருக்கோயில்களில் கிடைக்காது. வழிபாடு ஆதிக்கத்திற்கு உட்பட்டதுஅல்ல. நடைமுறைக்கு உட்பட்டது. இதனை மாற்றக்கூடாது. அர்ச்சகராகணும் விருப்பப்பட்டால் பொதுஇடத்தில் அனுமதி பெற்று திருக்கோயில் கட்டி அர்ச்சகர் பணியினை செய்யலாம். ஆகம விதிப்படி இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை