உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு ஓய்வுக்கு பின் புதிய பதவி?

டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு ஓய்வுக்கு பின் புதிய பதவி?

சென்னை: இம்மாதம் ஓய்வு பெற உள்ள, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆணையத்தின் தலைவராக நியமிக்க, அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையின் படைத்தலைவர் மற்றும் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.,யாக சங்கர் ஜிவால், 2023 ஜூன், 30ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதற்கான கோப்பில், முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கையெழுத்திட்டு உள்ளார். ஓய்வுக்கு பின், சங்கர் ஜிவால், தமிழக காவல் துறையின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்று, கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக அரசு, தீயணைப்பு துறையில் சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள உள்ளது. அதற்காக தீயணைப்பு துறை ஆணையம் ஒன்றை உருவாக்க உள்ளது. அதன் தலைவராக, சங்கர் ஜிவால் நியமிக்கப்பட உள்ளார். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என, கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
ஆக 26, 2025 03:33

இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் பணியில்லாமல் காத்திருக்கின்றனர் இதிலே இவருக்கு வேறு பணி


Kanns
ஆக 25, 2025 12:33

Ban ReEmployments of All Pensioners. Reduce OverFattened Pay& Perks of All UselessStooge Officials by 33%. Otherwise ThrowOut All RulingPartyGovts


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 25, 2025 07:20

கட்சிக்கு உண்மையாக, வடக்கனோ தெக்கனோ , யார் உழைத்தாலும் , அவர்களுக்கு பரிசும் பதவியும் உண்டு


Raj
ஆக 25, 2025 06:17

பதவிக்காலம் முடிந்து ஓய்வு என்று சொல்லிவிட்டு எதற்கு புதிய பதவி அப்போ பணி ஓய்வு அல்ல இது பதவி உயர்வு. எப்படி படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். சாகும் வரை அரசாங்க சீட்டை தேய்த்து கொண்டு போகவேண்டும்.


Mani . V
ஆக 25, 2025 05:42

இப்படி ஒவ்வொருவனுக்கும் பதவி நீட்டிப்புச் செய்தால் அப்புறம் எப்படி மற்ற திறமையாளர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை