உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உருவானது புதிய காற்றழுத்தம்: 10ல் துவங்குகிறது கனமழை

உருவானது புதிய காற்றழுத்தம்: 10ல் துவங்குகிறது கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் நகர்வு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், நாளை மறுதினம் முதல் கனமழை பெய்யத் துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கம் காரணமாக, இப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைய வாய்ப்புள்ளது. இந்த அமைப்பு, மேலும் மேற்கு, வடமேற்கில் தமிழகம், இலங்கை கரையை நோக்கி 11ல் நெருங்கும். அதே சமயத்தில், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த பின்னணியில், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம்

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை மறுதினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில், 11ல் கனமழை பெய்யலாம்.

சென்னையில்…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வலுவடைந்து வரும் நிலையில், 11 வரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதி களுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ahmed
டிச 08, 2024 10:28

முடியல...


Rafiq Ahamed
டிச 08, 2024 08:29

சரி இந்த முறை இயற்கை தன் கடமையை செய்யும்


Sekar Palanisamy
டிச 08, 2024 08:17

மக்கள் மத்தியில் அந்த ஆறாயிரம் கோடி ரூபாய் என்னதான் செய்தீர்கள் என்று ஆட்சியாளர்களை கேட்கும் வரை இந்த இயற்கையும் விடாது துரத்தும் திராவிட மாடல் அரசை. உண்மையை சொல்லிடுங்க என்பதுதான் மழையின் கோரிக்கையும் கூட


Abhivadaye
டிச 08, 2024 06:44

எதையும் தாங்கி போட்டோஷூட் நடத்தி வெற்றிக்கொடி ஏற்றுவோம். இது திராவிட மாடல் அரசு. இதே தொடர் புயல் மழை அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருந்தால் நம் கதி அதோ கதி என்பதைதமிழக மக்கள் அறிவார்கள்


D.Ambujavalli
டிச 08, 2024 05:57

தமிழகத்தை ஒருவழி பண்ணிவிட்டுத்தான் ஓய்வேன் என்று இயற்கை கங்கணம் கட்டிக்கொண்டு விட்டது போலும்


புதிய வீடியோ