உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாழ்க்கை துணைவர் பெயர்; பாஸ்போர்ட்டில் சேர்க்க புதிய நடைமுறை அறிமுகம்

வாழ்க்கை துணைவர் பெயர்; பாஸ்போர்ட்டில் சேர்க்க புதிய நடைமுறை அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாஸ்போர்ட் விண்ணப்பதாரர், தங்களின் வாழ்க்கை துணையை சேர்க்க, நீக்க, புதிய நடைமுறையை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, மறுமணம் செய்தவர்கள், தங்களின் துணைவர் குறித்த தகவலை சேர்ப்பது சிக்கலான நடைமுறையாக இருந்தது. அதை எளிமைப்படுத்த, 'இணைப்பு ஜெ' என்ற புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, வாழ்க்கை துணைவரின் பெயரை சேர்க்கவோ, நீக்கவோ, திருமண சான்றிதழுக்கு பதில், 'இணைப்பு ஜெ' பிரமாண பத்திரத்தை வழங்க வேண்டும். அதில், இரு தரப்பினரும் கையொப்பமிட்டு, சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படத்தை இணைக்க வேண்டும். இருவரின் முழு பெயர், முகவரி, பிறந்த தேதி, திருமண நிலை, ஆதார் எண், வாக்காளர் எண், பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.மறுமணத்திற்கு பிறகு, புதிய துணைவரின் பெயரை சேர்க்க, விவாகரத்து ஆணை, மறுமண சான்றிதழ், முன்னாள் துணைவரின் இறப்பு அல்லது மறுமண சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் விபரங்களை, 'https://www.passportindia.gov.in/psp' என்ற இணையதளத்தில் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜூன் 04, 2025 11:13

லிவ் இன் பார்ட்னர் பெயரை சேர்த்தல் கட்டாயமா? தன் பாலின இணையர் பெயர்?


GMM
ஜூன் 04, 2025 08:15

அரசு ஆவணங்களில் முதல் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், பிறந்த இடம்.. போன்ற நிரந்தர விவரங்கள் முன்புறம் இருக்க வேண்டும். பெயர் மாற்றம், கணவர், மனைவி, முகவரி மாற்றம் பின்புறம் வழங்கும் தேதி வரை இருக்க வேண்டும். முதல் பெயர் மூர்த்தி பின் அழகன் பின் வளவன் போன்றவை வரிசையாக அந்த ஆவணம் உள்ள வரை 5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்து பதிவு செய்ய வேண்டும். ஒரு முறை ஒரு நிரந்தர எண் வழங்க வேண்டும்.


Padmasridharan
ஜூன் 04, 2025 07:57

தலைப்பை மாற்றி இருக்கவேண்டும் அய்யா. ஒவ்வொருவருக்கும் இருப்பதோ ஒரு வாழ்க்கை. அதில் அந்தரங்க வாழ்க்கைக்கு தேவை ஒரு துணை. இந்த செய்தி விவாகரத்து பெற்று மறுமணம் செய்தவர்களுக்கு ஆகையால் "வாழ்க்கை துணைவர்" என்பதை மாற்றி கொடுத்திருக்கலாம்


Kasimani Baskaran
ஜூன் 04, 2025 03:35

பெயர் மாற்றம் தேவையற்றது. அடிமைத்தனத்தை ஊக்குவிப்பது.. பல நாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுவது இல்லை..


Varadarajan Nagarajan
ஜூன் 04, 2025 07:31

கணவர் பெயரை சேர்ப்பது கட்டாயம் அல்ல. அவரது விபரங்களை மட்டுமே அரசு சேகரிக்கிறது. கணவர் பெயர் சேர்ப்பதற்கு தேவையான திருமண சான்று மற்றும் ஆதார் போன்ற ஆவணங்களில் கணவர் பெயரை சேர்க்கவில்லையென்றால் பாஸ்போர்ட்டில் அவரது பெயர் இருக்கப்போவதில்லை. மனைவி, துணைவி, இணைவி போன்று பலர் இருப்பவர்களுக்கே மட்டுமே பிரச்சனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை