உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அழிவின் விளிம்பில் உள்ள 4 உயிரினங்களை பாதுகாக்க ரூ.1 கோடியில் புதிய திட்டம் 

அழிவின் விளிம்பில் உள்ள 4 உயிரினங்களை பாதுகாக்க ரூ.1 கோடியில் புதிய திட்டம் 

சென்னை:அழிவின் விளிம்பில் உள்ள சிங்கவால் குரங்கு, சென்னை முள்ளெலி, வரிக்கழுதைப்புலி, கூம்பு-தலை மஹ்சீர் மீன் ஆகிய நான்கு உயிரினங்களை பாதுகாக்க, 1 கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அழிவின் விளிம்பில் உள்ள சிங்கவால் குரங்கு, சென்னை முள்ளெலி, வரிக்கழுதைப்புலி, கூம்பு-தலை மஹ்சீர் மீன் ஆகிய உயிரினங்களை பாதுகாக்க, 1 கோடி ரூபாய் செலவில், ஒரு முன்னோடி திட்டத்தை தமிழக அரசு துவங்குகிறது. மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளைக் கொண்ட தமிழகம், உலகளவில் பல்லுயிர் பெருக்க மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விளிம்பின் நிலையில் அறியப்பட்ட உயிரினங்கள், எப்போதும் பொது மக்களின் பார்வையில் இல்லாவிட்டாலும், மகரந்தச் சேர்க்கை, விதை பரவல், நோய் கட்டுப்பாடு, நீர் அமைப்பு மறுசீரமைப்பு போன்ற செயல்பாடுகளால், சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்குகின்றன. சிங்கவால் குரங்கு பாதுகாப்புக்காக, 48.50 லட்சம் ரூபாய்; சென்னை முள்ளெலிக்கு, 20.50 லட் சம் ரூபாய்; வரிக்கழுதைப்புலிக்கு, 14 லட்சம்ரூபாய்; கூம்புத்தலை மஹ்சீர் மீனுக்கு 17 லட்சம் ரூபாய் என, மொத்தம் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை