உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி பெயரில் புதிய பல்கலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கருணாநிதி பெயரில் புதிய பல்கலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க பல்வேறு கட்சிகள் சட்டசபையில் கோரிக்கை வைத்தனர். பா.ம.க., தலைவர் மணி பேசுகையில், ''காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகம் உள்ளது. அகில இந்திய அளவில் நேரு, இந்திரா பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால், கருணாநிதி பெயரில் பல்கலை இல்லை. அமைக்க வேண்டும்,'' என்று கோரினார்.இதையடுத்து கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து அவர் சட்டசபையில் பேசுகையில், ''கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி. கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்'' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Yes God
ஏப் 28, 2025 18:02

கடலில் பேனா. தரையில் குறளோவியம் அடுத்தது மலைஅதற் கடுத்தது ஆறு. பாலைவனத்தில் ஆட்கள் இல்லை. .


Yes God
ஏப் 28, 2025 17:57

ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை யாராவது படித்திருக்கிறார்களா.


suresh guptha
ஏப் 25, 2025 14:40

yes how to be in power in the name of language even though u r not in that language person so onn so it is essential and inevi of the time


SRITHAR MADHAVAN
ஏப் 25, 2025 12:07

அப்பா பல்கலைக்கழகம்


Raja
ஏப் 25, 2025 00:30

கணித மேதை ராமானுஜன் ஊரில் சர்க்காரியா கமிஷன் குற்றவாளியின் பெயரில் பல்கலைக்கழகம் , தமிழகத்திற்கு வந்த சோதனை


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 24, 2025 23:07

இப்பல்கலையில் கல்வி கற்று பட்டம்பெற்று வெளியே வரும் மாணவ செல்வங்களுக்கு கலைஞருக்கு வாய்த்தது போலவே பல்வேறு வாய்ப்புகள் கிட்டட்டும்.


sankaranarayanan
ஏப் 24, 2025 21:50

கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் வேறு என்ன பாக்கி உள்ளது இன்னும் ஓர் ஆண்டில் எல்லாவற்றிற்குமே கருணாநிதி பெயர்தான் சூட்டப்படும் இதுதான் திராவிட மாடல் அரசின் அச்சீவ்மென்ட் வேறொன்றுமே இல்லை கருணாநிதி கேளம்பாக்கம் பஸ் நிலையம் கருணாநிதி நூலகம் கருணாநிதி பெருவழி சாலை கருணாநிதி திட்டம் இல்லம் தேடி கருணாநிதி கருணாநிதி பேனா கருணாநிதி நகர் கருணாநீதி சட்டம் இப்படியே போனால் நாடு எந்த நாடியா இது அதையும் சொல்லிவிடுங்கள் சீக்கிரமே


R.MURALIKRISHNAN
ஏப் 24, 2025 21:05

கூவத்திலும் காசு அடிப்பது எப்படி என கற்று கொடுத்தவர். அதுவும் ஒரு கலை. அதனால் அவர் பெயரில் பல்கலைகழகம்


Ramesh Sargam
ஏப் 24, 2025 20:59

அந்த பல்கலையில் போதைப்பொருள் கடத்துவது, விநியோகிப்பது,ஏழை விவசாயிகளை ஏமாற்றி அவர்கள் விளைநிலங்களை ஆட்டைபோடுவது, திமுக கட்டப்பஞ்சாயத்து, போன்ற பல புதிய பாடங்கள் கற்பிக்கப்படும்.


Murthy
ஏப் 24, 2025 20:28

வான்கோழி காவியம் ஆராய்ச்சி படிப்பு இருக்குமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை