உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தண்டவாளங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற புதிய வாகனம் அறிமுகம்

 தண்டவாளங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற புதிய வாகனம் அறிமுகம்

சென்னை; ரயில் தண்டவாளங்களில் உள்ள கழிவுகளை அகற்ற, புதிய தொழில்நுட்ப வாகனம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் பாதைகளில், தண்ணீர், குளிர்பான பாட்டில்கள் அதிகளவில் குவிந்து விடுகின்றன. இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க, மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் இயந்திரங்கள் ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டு உள்ளன. மற்றொருபுறம் ரயில் பாதைகளில் குவிந்து வரும் கழிவுகளை நீக்க, புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த, ரயில்வே ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப் படையில், குஜராத் மாநிலம் சபர்மதி ரயில்வே பணிமனையில், 'வாக்வம் அசிஸ்டட் டிராக் கிளீனர்' என்ற புதிய கருவி உருவாக்கப்பட்டு உள்ளது. ரயில் தண்டவாளங்களில் இயங்கும் வகையில் இந்த கருவி இருக்கும். இதன் வாயிலாக, தண்டவாளங்களிலும் மற்றும் அதன் பக்கவாட்டு பகுதிகளிலும் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படும். கடந்த வாரம் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த புதிய தொழில்நுட்ப வாகனம், படிப்படியாக எல்லா ரயில் நிலையங்களிலும் அறிமுகம் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ