உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எவரும் பொறுப்பேற்காத செய்தி, செய்தியே அல்ல: ஜெயமோகன்

எவரும் பொறுப்பேற்காத செய்தி, செய்தியே அல்ல: ஜெயமோகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இன்று நாம் ஜனநாயகம், மனித உரிமைகள் என்று சொல்லும் அனைத்துமே ஒரே ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இன்றைய நாடு, நவீன அரசு, நவீனக் கல்வி ஆகியவை கூட அதைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதுதான் 'செய்தி' என்பது. முன்பு செய்தி என்பது அரசால் பரப்பப்படுவதாகவோ மக்களின் வாய்மொழியாக பரவுவதாகவோ தான் இருந்தது. மிக மெல்லத்தான் செய்தி பரவியது. பரவும்போதே உருமாறி திரிபடைந்தது. ஒரே செய்தி பல்லாயிரம்பேரைச் சென்றடையத் தொடங்கியது நாளிதழ்களின் வருகையால்தான். நாளிதழ்களே, செய்தி என்னும் புறவயமான ஒரு நிகழ்வை கட்டமைத்தன. செய்தி, நவீன வாழ்க்கையின் அடிப்படையாக ஆகியது.செய்தித்தாள் உருவான தொடக்க காலகட்டத்தில் உருவானது, 'தினமலர்' நாளிதழ். திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்த பழைய கேரளத்தில் விடுதலைப் போருடன் இணைந்து செயல்பட்டது. இங்கே நிகழ்ந்த சமூக மாறுதல்களின் காரணியாக அமைந்தது. அதன்பின் தமிழகம் முழுக்க பரவி முதன்மை நாளிதழாக ஆகியது. தமிழக மக்களின் குரல்களில் வலுவான ஒரு தரப்பாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்று, நவீன சமூக ஊடகங்களின் காலகட்டத்தில், செய்தி என்பதே மறைந்து கொண்டிருக்கிறது. எவர் வேண்டுமானாலும் எதையும் இன்று செய்தியாக முன்வைக்க முடியும். அதற்கான ஊடகத்தை தொழில்நுட்பம் அளிக்கிறது. ஆகவே வதந்தியே செய்தியாக ஆகும் நிலை வந்துள்ளது. நம் காதில் விழும் செய்திக்கு எவர் பொறுப்பேற்பது என்னும் வினா இன்று முக்கியமானதாக ஆகியுள்ளது. ஆகவே நுாறாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று, செய்தியிதழ்களின் முக்கியத்துவம் பல மடங்கு கூடியுள்ளது. இன்று செய்தியை அளிக்க ஏராளமான ஊடகங்கள் உள்ளன. பொறுப்பான, நம்பகமான செய்தியை அளிப்பதற்குத்தான் செய்தியிதழ்கள் தேவையாகின்றன. ஒரு நிறுவனத்தின் செய்தியை நாம் ஏற்கலாம், மறுக்கலாம்.ஆனால், அந்நிறுவனம் அச்செய்திக்குப் பொறுப்பேற்கிறது. எவரும் பொறுப்பேற்காத செய்தி செய்தியே அல்ல, வதந்தி என நாம் இன்று புரிந்துகொள்ள வேண்டும். இச்சூழலில், தினமலர் போன்ற செய்தி இதழ்களின் பங்களிப்பு, மிக முக்கியமானதாக ஆகிறது. தினமலர் தன் செய்திகள் வழியாக, இன்னும் நுாறாண்டுக்கு ஆற்றலுடன் செயல்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்இப்படிக்கு,ஜெயமோகன்எழுத்தாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

KOVAIKARAN
செப் 14, 2025 17:55

திரு ஜெய மோகன் அவர்கள் கூறியது ஓரளவு உண்மை என்றாலும், நமது தமிழகத்தில், தினமலர் நாளிதழ் ஒன்றைத் தவிர வேறு எந்த நாளிதழ் 100% உண்மைச் செய்தியை வெளியிடுகிறது? முப்பது வருடங்களுக்கு முன் தினமணியை விரும்பிப்படித்தவர்கள் ஏராளம். திரு கோயங்கா அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, பைனான்சியல் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளின் குழும தலைவராக இருந்தபோது அவைகளின் தரம் நன்றாக இருந்தது. அவர் மறைந்த பின்னர், அனைத்தும் மாறிவிட்டது. ஒரு சாரார் குறித்து உண்மையற்ற செய்திகளை வெளியிட்டுவந்தது. அதன்பின்னர் அதனுடைய நீண்ட நாளைய வாசாகர்களை இழந்தது. அந்த வாசகர்கள் தினமலர் பக்கம் சாய்ந்தார்கள். தினத்தந்தி சொல்லவே வேண்டாம். அவர்கள் எப்போதுமே தீமுக பக்கம் தான். தமிழ் ஹிந்து நாளிதழும் அவ்வாறேதான். கம்யூனிசமம் கொஞ்சம் அதிகம். இந்த முப்பது ஆண்டுகளில், உண்மையின் உரை கல்லான தினமலர் 75 வருடங்கள் ஆகியும் இப்போது இருக்கும் உயர்ந்த நிலைக்கு காரணம், அவர்களுடைய நடுநிலையான செய்திகளே. முக்கியமாக சினிமா செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது. முப்பது வருடங்களுக்கு முன்னாள், நான் மேற்கூறிய பல பத்திரிகைகளை வாசிப்பதுண்டு. ஆனால், கடந்த பல வருடங்களாக தினமலர் ஒன்று மட்டுமே தினமும் வாசிக்கிறேன்.


Sridhar
செப் 14, 2025 14:16

என்னதான் ஊடகங்கள் செய்திகளுக்கு பொறுப்பேற்றுக்கொண்டாலும், அக்காலங்களில் அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்திகளை இலகுவாக கையாள முடிந்தது. மேலும் அவர்களுடய சித்தாந்தத்திற்கு ஏற்றவாறு செய்திகளை வடிவமைக்ககூட முடிந்தது. அவர்களுக்கு தேவை என்றால், ஒருவர் மஹாத்மாவாக்கப்படுவார், மற்றசிலர் சிறுமை படுத்தப்படுவார்கள். ஒருசில ஊடகங்கள் நேர்மையாக இருந்தாலும், அவர்களாலும் பொதுவான போக்கை எதிர்த்து நிற்க முடியாத சூழ்நிலை அப்போது. ஆனால், இன்றோ, செய்தி என்பது ஒருவரோ அல்லது ஒரு கும்பலோ வடிவமைப்பது அல்ல. போலி செய்திகள் பொறுப்பற்றமுறையில் உலவுவது உண்மையாக இருந்தாலும், அவற்றை சீர்த்தூக்கி பார்த்து அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன எனும்போது, இன்றைய கால கட்டங்களில் பொறுப்பு வாசகர்கள் மீது சாய்க்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் சரித்திரத்தை பற்றிய கட்டுக்கதைகளை பார்க்கும்போதும், இன்றைய தேதியில் வெளிப்படையாக தெரியும் அயோக்கிய கும்பல்கள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி தங்களை வளர்த்துக்கொண்ட விதத்தை பார்க்கும்போதும், செய்திகள் தாராளமயமாக்கப்படுதல் மக்களுக்கு அவசியமான ஒன்று என்றே தோன்றுகிறது.


kannan
செப் 14, 2025 12:06

இதை ஏன் மறைக்கிறீர், திருவாங்கூர் சமஸ்தானம் ஜின்னாவுன் சேர்ந்து தனிநாடக முயற்ச்சித்தது. 1. ஜின்னாவின் கையெழுத்து / வயர் 20 ஜூன் 1947 — வரலாற்று ஆய்வுகள் Ramachandra Guha மற்றும் பிற எழுத்துகள் சொல்வதற்கு, ஜின்னா 20 ஜூன் 1947-இல் சிர் C. P.க்கு ஒரு வயர் அனுப்பி: “Pakistan was ready to establish relationship with Travancore which will be of mutual advantage” என்று கூறியதாக உள்ளது. இது Travancore-இன் ‘தனிநாட்டுக்’ முயற்சிக்கு வெளிப்புற ஆதரவு போலவே புரிந்துள்ளது.  2. C. P. அவர்களின் பதில் மற்றும் ‘சந்தா/க்‌ரவுட்’ மற்றும் ஒப்பந்த ஆலோசனைகள் — சி.பி. அய்யர் திருவாங்கூரை “independent sovereign entity” போன்று வைத்துக் கொண்டு Pakistan உடன் ஒரு உரிமை/உறவு treaty பற்றி முன்மொழிந்ததாக சில ஆவணங்கள் மற்றும் வரலாற்று கட்டுரைகள் குறிப்பிடுகின்றன. இதற்கும் Guha போன்ற ஆய்வாளர்கள் ஆதாரங்கள் வழங்குவர்.  3. இந்திய அரசு மற்றும் மவுண்ட்போட்டன் கவலை تحدث்களின் பயனீடு — மவுண்ட்போட்டன் மற்றும் இந்திய மையக் கூட்டாளர்கள் இதை அனுமதிக்க மறுத்து переговоры negotiations நடத்தினர் இரண்டாம்பக்கம், சி.பி. மீது 25 ஜூலை 1947-இல் நடந்த கொலை முயற்சி assassination attempt அவரது ஆதரவை குறைத்ததோடு, அதன்பின் Travancore துரிதமாக இந்தியக் கூட்டு accession செய்யப்பட்டது.  4. பிரித்தானிய பயன் monazite பற்றிய ஆதாரங்கள் — சில வரலாற்று ஆய்வுகள் Guha உள்ளிட்டோர் சொல்வதாவது — சில பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்றும் வட்டங்கள் திருவாங்கூரின் மானசைட் monazite வளங்களுக்கு அணுக மிக ஆர்வமாக இருக்க கைகொடுக்கியதாகும் இதும் தனிநாட்டாக இருக்கத் தூண்டியது என்றார் Guha. இது வரலாற்று பகுப்பாய்வு—அதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் சில இடங்களில் குறிப்பிடப்படுகின்றன.  5. மூல ஆவணங்கள் மற்றும் Jinnah Papers — இதை உறுதிப்படுத்த சர்வதேச மற்றும் இந்திய ஆவணங்களிலும் குறிப்பிடல்கள் உள்ளன உதா. Jinnah Papers, FRUS / Office of the Historian குறிப்பு. தேவைப்பட்டால் நான் அந்த குறிப்பிட்ட பக்கங்கள்/அடி-அடி மேற்கோள்களை Jinnah Papers v. IX அல்லது Guha-வின் உரை நேரடியாகத் தேடி கொடுக்கலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 12:56

சரியான விளக்கம் ...... நன்றி ....


ஆரூர் ரங்
செப் 14, 2025 14:50

நகர நக்சல்களுக்கு ஆதரவான ஒரு அடிவருடி எழுதியதெல்லாம் ஆதாரமா? பாரதம் மதசார்பற்ற நாடு என அறிவிக்கப்பட்டது திருவாங்கூர் அரசருக்கு ஏற்புடையதாக இல்லை. தன்னுடைய மண் எப்போதுமே ஹிந்து மண்ணாக இருக்க வேண்டும் என விரும்பினார். துரோகத்தின் மொத்த உருவமான ஜின்னாவை யாருமே நம்பவில்லை. ஈரவெங்காயம் மட்டுமே அவரை அண்டினார்.


naadodi
செப் 14, 2025 18:45

என்ன சொல்ல வரிர்? திருவாங்கூர் சமஸ்தானத்தின் தேசபக்தி பற்றி ஜெயமோகன் பேசவில்லை. தினமலர் எப்படி தேசிய உணர்வுடன் இருந்தது, திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து கொண்டும் என்று தான் பொருள் கொள்ள வேண்டுமே தவிர, சம்பந்தமில்லா விஷயங்கள் பற்றி பேச வேண்டிய அவஸ்யமில்லை


kannan
செப் 15, 2025 21:55

ஆரூராரே, இரண்டு ராமசாமியும் தனிநாடு கேட்டார்கள். ஆனால் ஒரு ராமசாமியை மட்டும் போலி தேசபக்தர்கள் சாடுவது ஏன்?


theruvasagan
செப் 14, 2025 11:36

இளம் தலைமுறையினருக்கு நாளிதழ்களை படித்து நாட்டு நடப்பை உலக நடப்பை அறிந்து கொள்ள ஆர்வமோ நேரமோ இல்லை. கூகுள் யூடியுப் போன்ற இணைய தளங்களில் வலம் வரும் தெளிவில்லாத நம்பகத்ததன்மை குறைந்த செய்திகளையும் சமுதாய அக்கறை இல்லாமல் காளான் போல் பரவிக் கிடக்கும் ஊடகங்களில் வரும் வதந்திகளை பரபரப்பு செய்தி என்று மசாலா கூட்டி பரப்பப்படும் தகவல்களையும் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத சினிமாகாரர்கள்.பற்றிய செய்திகளையும் படித்து பார்த்து ரசிக்கின்றனரே தவிர உண்மையை அவற்றில் தேட முற்படுவதில்லை. உண்மையை உள்ளபடி உரைக்கும் கண்ணியமான செய்தி ஊடகங்கள் பக்கமே அவர்கள் வருவதில்லை.


ஆரூர் ரங்
செப் 14, 2025 11:22

ஈவேராவின் சைவ வைணவம் பற்றிய பழைய பேச்சைத்தான் பொன்முடி திரும்பிப் பேசியதாக போலீஸ் முட்டுக் கொடுக்கிறது. ஆனால் அதேபோல யாரோ அனுப்பிய குறுஞ்செய்தியை ஃபார்வர்ட் செய்த சேகருக்கு அதே போலீஸ் தண்டனை. முற்றிலும் சரி எனத் தெரிந்தாலும் கூட எதையும் ஃபார்வர்ட் செய்யக்கூடாது என்றாகி விட்டது. பேச்சுரிமைக்கு வேட்டு.


புண்ணியகோடி
செப் 14, 2025 11:14

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களின் கருத்தை பாராட்டுகிறேன். சமூக ஊடகங்கள் வழி செய்திகளை அறிந்து கொள்ளும் இன்றைய தலைமுறைக்கு, செய்திப்பத்திரிகைகளின் நோக்கமும், பணியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்பவை பத்திரிகைகளே. அவற்றின் பணியுடன் ஒப்பிடும்போது, வினாடிக்கு வினாடி பரபரப்புக்காக பிளாஷ் நியூஸ், பிரேக்கிங் நியூஸ் போடும் தொலைக்காட்சிகள் எல்லாம் வெறும் குப்பை. அதைத்தான் தேர்ந்த வார்த்தைகளில் வடித்திருக்கிறார் ஜெமோ அவர்கள். வாழ்த்துக்கள் தினமலருக்கும், ஜெமோ அவர்களுக்கும்


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
செப் 14, 2025 10:18

இது எல்லா நாளிதழ்களுக்கும் பொருந்தும் பொதுவான கருத்து. பல யூடுபே சேனல்களை விட செய்தித்தாள்கள் நம்பிக்கை வாய்ந்தவை என்பதும் உண்மை. தனது கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் தலையங்கம் எழுதி தெரிவிக்கட்டும்.


kannan
செப் 16, 2025 01:32

வாசகர் கடிதம் என்ற பெயரில் கட்டுரை வெளியிடும் டுபாக்கூர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?


Barakat Ali
செப் 14, 2025 10:01

கருத்தை வழிமொழிகிறேன் ......


vbs manian
செப் 14, 2025 09:30

ஒரே செய் பல உருவங்களில் வருகிறது. அரசியல் கட்சியின் கைப்பாவையாக பல இதழ்கள் செயல்படுகின்றன.


ஜெ.குருநாதன் மதுரை
செப் 14, 2025 08:52

ஆசான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை