செய்திகள் சில வரிகளில்...
* சென்னை, கோவை, தஞ்சை, வேலுார், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சியில், 'சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' பெயரில் நாட்டுப்புற கலை விழாக்களை தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை நடத்த உள்ளது.சென்னையில் பொங்கல் பண்டிகையின் போது, சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற இடங்களில் நடத்தப்படும். பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் ஐந்து நிமிட வீடியோவை 'சிடி' அல்லது 'பென் டிரைவில்' பதிவு செய்து அத்துடன் 'www.artandculture.tn.gov.in'ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தொடர்புடைய மண்டல கலை பண்பாட்டு அலுவலகங்களுக்கு, பதிவு தபாலில் டிச.10க்குள் அனுப்ப வேண்டும்.