உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிகை உரிமையாளர் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிகை உரிமையாளர் உயிரிழப்பு

திருநெல்வேலி: நெல்லையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் உள்ள தடுப்பூச்சுவரில் மோதி, கண்டெய்னரில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த தினபூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் உயிரிழந்தார். அவருடன் வந்த மகன் ரமேஷ் காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை