உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்று வந்தது காபி பொடி; அடுத்து வரப்போகுது பூட்டு; அறப்போர் இயக்கம் வேட்டு

அன்று வந்தது காபி பொடி; அடுத்து வரப்போகுது பூட்டு; அறப்போர் இயக்கம் வேட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரேஷன் பொருட்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

கோமாளித்தனம்

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஏழை மக்களுக்கு கொடுக்கப்படும் ரேஷன் பொருட்களில் கொள்ளை அடித்த கிறிஸ்டி நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் 3 வருடங்களாக பாதுகாத்து வருகிறார். தமிழகத்துக்கு துணை முதல்வர் அதோ வருகிறார், இதோ வருகிறார் என்று கோமாளித்தனம் செய்து கொண்டு இருக்காமல், கிறிஸ்டி நிறுவனம் மீது எப்.ஐ.ஆர்., எப்பொழுது வரும் என்று சொல்லுங்கள்.

மக்களுக்கு சொல்லுங்க

4 மாதங்கள் கழித்து அறப்போர் புகார் மீது முதல் எப்.ஐ.ஆர்., பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை 3 வருடங்களாக ரேஷன் ஊழலில் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று மக்களுக்கு தெரியப்படுத்துங்கள், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெகா ஊழல்

மேலும், மிகவும் அப்பட்டமாக நடந்தேறிய ரேஷன் ஊழல் பற்றி அறிந்து கொள்ள இந்த காணொளி பாருங்கள் என்று ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் கூறியதாவது:- 2021ல் கடைகளில் பருப்பு சில்லறை விலையில் ரூ.100க்கும், மொத்த விலையில் ரூ.90க்கும் விற்பனையாகியது. ஆனால், ரேஷன் கடைக்கு கிறிஸ்டி நிறுவனத்திடம் இருந்து பருப்பை ரூ.146க்கு அரசு கொள்முதல் செய்கிறது. 6 ஆண்டுகளாக மார்க்கெட் விலையை விட, கிறிஸ்டி நிறுவனத்திற்கு ரூ.30 முதல் ரூ.50 வரை கூடுதல் விலை கொடுத்து அரசு வாங்குகிறது. அதேபோல, சர்க்கரைக்கு ரூ.10 கூடுதலாக கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதிக விலை கொடுத்து அரசு வாங்குவதால் தான், ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் பொருட்கள் முழுமையாக வழங்க முடியாமல், தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகிறது.

வாக்குமூலம்

இது தொடர்பாக புகார் அளித்ததை தொடர்ந்து, டெண்டரை ரத்து செய்துவிட்டு, மீண்டும் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்ற அதே கிறிஸ்டி நிறுவனம், பருப்பை ரூ.87க்கு தருவதாக முன்மொழிந்துள்ளது. இதன்மூலம், கடந்த காலங்களில் தமிழக அரசிடம் இருந்து பருப்புக்கு ரூ.60 அதிகம் பெற்றதை வாக்குமூலமாக கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

நீதிபதியே கேள்வி

இந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தை நாடினோம். அப்போது, இதுக்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும் என்று நீதிபதியே கேள்வி எழுப்பினார். இவ்வளவு ஆதாரத்துடன் கொடுத்தும், லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை.வழக்குப்பதிவு செய்யாமல், கிறிஸ்டி நிறுவனத்தையோ, அதானி நிறுவனத்தையோ காப்பாற்றுவோம் என்றால், முதல்வர் ஸ்டாலின் அந்த நிறுவனங்களில் போய் வேலை செய்யட்டும். இங்கு எதுக்கு முதல்வராக இருக்கிறீர்கள்?

அடுத்து பூட்டு தான்

தூங்குபவர்களுக்கு காப்பிப் பொடியை அனுப்பி எழுப்பலாம். தூங்குவதைப் போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும் என்று எல்லாரும் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை தூக்கத்தில் இருந்து எழுந்திருத்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவில்லை என்றால், நாளை பூட்டு அனுப்பலாம், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ethiraj
செப் 23, 2024 02:10

DVAC is under the control of CM and he is busy visiting countries . Only when UDAY becomes CM things may improve


Sathyanarayanan Sathyasekaren
செப் 20, 2024 23:04

பிஜேபி மீது வீண் பழிகளை சுமத்தும், கொத்தடிமைகள் வேளாண் போலி ஐயங்கார், அப்பாவி, கனோஜ் ஆங்கிரே, இன்னும் பல கொத்தடிமைகள் தூங்க போய்விட்டார்கள்.


R. THIAGARAJAN
செப் 20, 2024 19:35

An excellent judge can be given as follows: All the corrupted officials and politicians FOGERY assets must be recovered + all of them must consumed only the Ration/PDS. supply public market must denied them their sales for this corrupted gang.


J.V. Iyer
செப் 20, 2024 18:44

இந்த அரசு மக்களின் மேல் உட்கார்ந்துகொடு முதுகில் குத்துகிறது.. மக்களும் சிரித்துக்கொண்டே இவர்களுக்கு வோட்டு போடுகிறார்கள். இருநூறு ரூபாய் செய்யும் மாயம்தான் என்னே??


venkataraman vs
செப் 20, 2024 16:39

எதற்கும் வெட்கப்பட மாட்டோம், நீதிமன்றம் அசிங்கப் படுத்துனாலும் அசர மாட்டோம், எங்களுக்கு வரவேண்டிய கமிசனை எப்போதும் எக்காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.


என்றும் இந்தியன்
செப் 20, 2024 16:36

பரவாயில்லையே திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு ரொம்ப ரொம்ப தான் intelligent அரசு கொள்ளை அடிப்பதில் ஊழல் செய்வதில். துவரம் பருப்பு 15000 டன் உளுத்தம் பருப்பு 10000 டன் டெண்டர் விட்டது அதாவது ஒரு வருடத்திற்கு வேண்டும் பருப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள். ரூ60 ஒரு கிலோவிற்கு அதிகம் கொடுக்கின்றது என்றால் வருடத்திற்கு வெறும் ரூ 1500 கோடி தான் அதில் கமிஷன் 60% என்றால் வெறும் ரூ 900 கோடி தான் கிறிஸ்டி நிறுவனத்திடமிருந்து கிடைக்கின்றது திருட்டு திராவிட மடியல் அரசுக்கு


சமூக நல விரும்பி
செப் 20, 2024 15:20

ரேஷன் கடைகளில் வாங்கும் அனைத்து பொருட்களிலும் கலப்படம். அரிசி பருப்பு எல்லாவற்றிலும் கல் குப்பை கோதுமையில் மன் இப்படி எல்லா துறையிலும் ஊழல். செய்யும் திமுக மாடல் அரசு எப்போது ஒழியும். மக்களுக்கு விடியல் எப்போது கிடைக்கும்.


Palanisamy Sekar
செப் 20, 2024 14:45

மந்திரிகள் மீதுதான் ஏகப்பட்ட ஊழல் வழக்குகள். கோர்ட் ஏறாத மந்திரிகள் இல்லை எனலாம். அந்த அளவுக்கு ஊழலில் சிக்கி தவிப்பது இந்த திராவிட மாடல் அரசு. இப்போ முதலமைச்சர் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்பு துறையை வைத்துக்கொண்டு குற்றவாளிகளை காப்பது இன்னோர் ஊழல்தான்? ஆகமொத்தம் ஒட்டுமொத்த திராவிட மாடல் அரசும் இப்போ விழி பிதுங்கி நிக்குறாங்க. எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அரசு என்று சொன்னா மட்டும் போதுமா? இப்போ நீதியரசர் சும்மா கிழி கிழின்னு கிழிக்கிறாரே...பதிலை சொல்லுங்க முத்துவேல் ஸ்டாலின்


கூமூட்டை
செப் 20, 2024 14:44

ஊழலை வளர்ச்சி மற்றும் அதன் பரிமாற்றம் வளர்ச்சி மற்றும் ஆட்சி அதிகாரம் துஷ்பிரயோகம் பற்றி பேசினாரா?? ஊழல் வாதிதக்காளி வளர்க பாடுபடுகிறது. மக்கள் மாங்காய் மடையர்கள்


Hari
செப் 20, 2024 13:33

Where are jalra venugopal and other kothadimais


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை